ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான்... - OSHO
கேள்வி : - ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் .
இதைச் சற்று விளக்க முடியுமா ?
ஓஷோ பதில் : - " ஆம் .
★ இது உண்மைதான் .
ஏனெனில் இருவரும் சாதாரண மனநிலையில் ,
சாதாரண மக்களைப் போல பெரும்பாலும் இருப்பது இல்லை .
ஞானி என்பவன் சாதாரண மனதைக் கடந்து மேலே சென்றவன் .
பைத்தியம் என்பவன் மனதிற்குக் கீழே சென்றவன் .
இதுதான் ஒரே வித்தியாசம் .
ஆனால் இதன் பின்விளைவுதான் அசாதாரணமானது .
★ஞானி மனதைக் கடந்து மேலே சென்று பேரானந்த நிலையில் இருக்கிறான் .
பைத்தியம் மனதிற்குக் கீழே சென்று ஒருசில எண்ணச் சுழலிலேயே சிக்கித் தவிக்கறான் .
மேலே சென்றவன் , எண்ணங்களை ஒதுக்கிச் சென்றிருக்கிறான் .
கீழே சென்றவன் மன இறுக்கம் , கவலை , எதிர்பாராத பெருத்த ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவனுடைய மனநிலையைப் பாதித்து அவனை கீழே கொண்டு சென்றுவிட்டது .
★ஆனால் இருவரது கண்களையும் பாருங்கள் .
அவை ஒன்றுபோலவே ஒருவித வெறுமையில் இருக்கும் .
இருவரும் இந்த உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் எங்கேயோ சஞ்சரித்துக்கொண்டு இருப்பார்கள் .
இருவரும் பலசமயம் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வார்கள் ; தானே சிரிப்பார்கள்
இதனால் கீழை நாட்டில் ,
அநேக பைத்தியங்களை ஞானிகள் என்று கருதி மக்கள் வழிபடுகிறார்கள் !
இது கிராமத்தில் சகஜம் .
★ஆனால் மேலைநாட்டில் ஒரு ஞானியைக்கூட பைத்தியக்காரன் என்றுதான் எண்ணுவார்கள் .
ஜீசஸ் , சாக்ரடீஸ் போன்றவர்களைப் பலர் பைத்தியக்காரன் என்றே கருதிவருகிறார்கள் .
பொதுவாக பைத்தியம் ஒரு மிருகம்போல செயல்படும் .
மனம் அவன்வசம் ஒருக்காலும் இருக்காது .
ஆனால் ஞானியிடம் மனம் ஒரு வேலைக்காரன்போல செயல்படும் .
அதைப் பார்த்துத்தான் அவன் சற்று சிரிப்பான் .
இவன் வானத்தில் பறப்பவன் .
ஆனால் பைத்தியம் பூமிக்கு அடியில் சென்றவன் .
★ஞானி விழிப்புணர்வில் முழுமையாக இருப்பவன் .
பைத்தியக்காரன் விழிப்புணர்வின் அதல பாதாளத்தில் இருப்பவன் .
ஆனால் வெளிப்பார்வைக்கு இருவருமே ஒன்றுபோலவே காணப்படுவார்கள் .
இருவரும் ஆடை மற்றும் உணவு விஷயங்களில் அக்கறை காட்டமாட்டார்கள் .
ஏதோ கிடைத்ததை உண்டு வழியில் எங்கேயாவது தன்னை மறந்து கிடப்பார்கள் .
★ஒருவன் ஞானி என்று எப்படி அடையாளம் காண்பது ......???
அதற்கு உங்கள் உள்ளுணர்வையும் , பகுத்தறிவையும் மேன்மைப்படுத்த வேண்டும்.
அப்பொழுது அது உங்களுக்குச் சரியாகச் சுட்டிக்காட்டும் . வேறு வழியில்லை . " <3
<3 ஓஷோ <3
Comments
Post a Comment