என்னால் என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லையே . நான் என்ன செய்வது......??? - OSHO
ஓஷோ கேள்வி பதில்கள்
கேள்வி : ஓஷோ ,
எனக்கு எல்லாம் புரிகிறது .
ஆனால் என்னால் என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லையே .
நான் என்ன செய்வது......???
பதில் :
" மனதால் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் ,
அதை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான வேலை இல்லை
பழக்கம் என்பது நீங்கள் மீண்டும் ,
மீண்டும் அதே செயலை பிரக்ஞையில்லாமல் ,
இயந்திரத்தனமாகச் செய்வதுதான்.
இப்படித்தான் மனிதர்களில் 90 - லிருந்து 95 பேர்கள் செய்கிறார்கள்.
இப்படி ஒருவர் ஒரு காரியத்தை தினசரி பத்து அல்லது இருபது தடவை செய்யும்பொழுது
அது மிக அழுத்தமாக உங்கள் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.
இப்படி ஒரு பழக்கம் உங்களிடம் 20 - லிருந்து 30 ஆண்டுகள் இருந்தால்,
அதை மாற்றுவது என்பதோ அல்லது எடுப்பது என்பதோ ஒரு மரணவலியை உண்டுபண்ணும்
ஒருவர் , ' ஐயா , அதற்குப்பதிலாக நான் உயிரைக்கூட விடத் தயார் ' என்று கூறுவார்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ,
வயதான காலத்தில் இப்படித்தான் கூறுவார்கள்
காரணம் உணவுப் பழக்கத்தை மாற்ற இயலாது
உதாரணமாக ,
நீங்கள் உங்கள் பெற்றோர்களால் , கோவிலுக்குச் சென்று ,
சிலைகள் வழிபாட்டை சுமார் ஐந்து வயது காலகட்டத்தில் ஆரம்பித்திருந்தால் ,
பிற்பாடு சுமார் , 25 வயது வாலிபப்பருவத்தில் உங்களுடைய சுய சிந்தனையாலும் பகுத்தறிவினாலும் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
அது ஒருவித நம்பிக்கையின் அடிப்படையில் வழக்கமான ஒன்று
நீங்கள் தீர்மானமாகப் புரிந்துகொண்டாலும்
உங்களால் உங்களை ஒருக்காலும் மாற்றிக்கொள்ள முடியாது.
அப்படி உங்களை மாற்றிக்கொள்ள, மிகுந்த தைரியம் வேண்டும்.
பெரும்பாலான அறிவாளிகளுக்கு தைரியம் கிடையாது
ஒரு படிப்பறிவு இல்லாதவனிடம் உள்ள தைரியத்தில் கால்பாகம் கூட படிப்பாளியிடம் கிடையாது
ஆகவேதான் , ஒரு டாக்டர் , ஒரு தத்துவவாதி , ஒரு பொறியாளன் , தர்க்கவாதி , விஞ்ஞானி எல்லோருமே சுயசிந்தனை இருந்தும் நடைமுறைப்படுத்தும் தைரியமற்று இருக்கிறார்கள்.
ஆகவே , ஒரு படிப்பாளி மதத்தன்மை மற்றும் மதம் சம்பந்தப்பட்ட எண்ணங்களில் ஒரு முட்டாளைவிட மிகவும் கேவலமாக நடக்கிறான்
அவனால் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியவில்லை .
அதற்கு வேண்டிய தைரியம் இல்லை.
சிறுவயது பழக்கம் பசுமரத்தாணிபோல பதிந்துவிட்டது .
மேலும் இந்த உலகத்தில் 90 சதவிகிதம் பேர் சிலைவழிபாடு செய்யும்பொழுது ,
நீங்கள் மாத்திரம் தியானம் செய்வது
ஒரு பைத்தியக்காரச் செயல்போல உங்களுக்குத் தோன்றுகிறது, மற்றவர்களுக்கும் தோன்றுகிறது
ஆமாம் . கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்தான்
மேலும் மனம் ஒரு வழியில் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டால்,
அது புதுமையைக் கண்டு பயப்படும்.
மனம் மிகவும் கோழைத்தனமானது
உதாரணமாக , நீங்கள் மனதோடு இரண்டறக்கலந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள்.
நான் "மனமற்று வாழுங்கள் "என்று சொன்னால்,
உங்கள் மனம் பயப்படுகிறது சந்தேகப்படுகிறது.
அது ஒருக்காலும் தன்னை இழக்க ஒத்துக்கொள்ளாது
இதுதான் பெரும்பிரச்சனை
ஆகவேதான் பெரும்பாலோர் தியானம் செய்யப் பயப்படுகிறார்கள்
மேலும் 100 - க்கு 75 - பேர்கள் , ' இது சோம்பேறிகளின் வேலை ' என்று கருதுகிறார்கள்.
அந்த நேரத்தில் ஏதாவது செய்து பணம் சம்பாதிக்கலாமே......
இதுதான் மனிதனின் மனம்
மனமற்ற நிலையைப்பற்றி சென்ற கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறேன் .
அதில் நீங்கள் திருப்தி அடைந்தால் , அதை ஒருசில நிமிடமாவது அடைய முயற்சி செய்யவும் போதும்.
இதற்கே , மிகுந்த வைராக்கியம் வேண்டும்
விடாமுயற்சி வேண்டும்
இது ஓரளவு வெற்றி அடைய ஒரு வருடம் முதல் பல வருடம் வரை ஆகலாம்
இதுதான் உண்மை.
அப்படி முடியாவிட்டால் ,
எப்பொழுதும்போல , பூ , பழங்களுடன் , கோவிலுக்குச் சென்று ஒரு பொய்யான நம்பிக்கையையும் , ஆறுதலையும் பெற்று ஏதோ வாழ்ந்து மடியுங்கள் <3
Comments
Post a Comment