நீ முட்டாளாக இருந்தால் - OSHO
நீ முட்டாளாக இருந்தால்;, என்னைப் பற்றிப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பாய். இவ்வாறுதான் உலகில் பல மனிதர்களும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். நீ யாரிடமாவது சென்று, “ இது உங்களால்தான் குருவே நடக்கிறது. நீங்கள்தான் எனது இதயத்தின் தலைவர்” என்று நீங்கள் கூறினால் அந்த மனிதர் உங்களையும் பிறரையும் சுரண்டுவதற்கு வாய்ப்பளிக்கிறீர்கள்.
ஆன்மீக குருக்கள், தீர்க்கதரிசிகள், இரட்சகர்கள், இவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர்கள் சுத்த ஏமாற்றுக்காரர்கள். ஆனால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. நீங்கள் அவர்களை ஏமாற்றுக்காரர்காளாக்கி விட்டீர்கள்.
நான் யாரும் என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பவில்லை. எந்தவிதத்திலும் என்னிடம் பற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பவில்லை.
எனது முழு முயற்சியும் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தைத் தரவேண்டும் என்பதும். உங்களுக்கு வேண்டியது எதுவாக இருந்தாலும் அதை நீங்களே உங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்ள வேண்டும். என்பதும்தான். கடவுள்கூடத் தேவையில்லை, உங்களுக்கு நீங்கள் மட்டுமே போதும்.
ஓவ்வொரு மனித உயிருக்கும் உயிர்வாழ்தல் தருகின்ற மகத்தான அருளாசி இதுதான். நீங்கள் முழுமையாகச் சரியாகப் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதை ஆராய்ந்து பார்ப்பதில்லை. அது உறங்கிக் கொண்டு இருக்கிறது.
உங்களது உட்புறத்தை, உள்ளுணர்வுச் சார்புத் தன்மையை ஆராய்ச்சி செய்பவராக மாறுங்கள். அப்போது நீங்கள் ஆயிரக்கணக்கான ஆனந்தங்கள், பிரமாதமான அருளாசிகள், கற்பனை செய்துகூடப்பார்த்திராத, கனவுகூடக் கண்டிராத விஷயங்கள் இவற்றைப் பார்ப்பீர்கள்.
நீங்கள் ஒரு சொர்க்கம். ஆனால் நீங்கள் உங்களையே மறந்து விட்டீர்கள்.
உங்களுக்குள் பார்ப்பதைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பார்க்கிறீர்கள். ஆனால் அங்கே மட்டும்தான் நீங்கள் பொக்கிஷம், உண்மை, அழகு இவற்றைக் கண்டுகொள்ளப் போகிறீர்கள்.
இப்படி சவுக்கடி மூலம் உண்மையை உணர்த்த ஓஷோவை தவிர யாரால் முடியும்?
--ஓஷோ--
Comments
Post a Comment