Google

சுய ஒழுக்கமும் விழிப்பும் கொண்டவன் பாதையில் ...- OSHO



சுய ஒழுக்கமும் விழிப்பும் 
கொண்டவன் பாதையில் ...

ஆசை குறுக்கிடுவதில்லை ...

மனிதன் மாறிக் கொண்டே
இருப்பவன் ...

மனிதன் தன்னைத்தானே உருவாக்கிக்
கொள்ள வேண்டியிருக்கிறது ...

நீ உன்னையே படைத்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது ...

நீயாகவேதான் விழிப்படைந்து
கொள்ள வேண்டும் ...

விழித்துக் கொண்ட மனிதன் பிரபஞ்சத்தின்
மையம் என்கிறார் புத்தர் ...

மரம் தன் இதயத்தை திறந்து விடுவதுதான்
அது பூத்து குலுங்குவது ...

மலர்களாக மாறி மணம் பரப்புவதற்கு
அன்பு வேண்டும் ...

நீயும் ஒரு மலராகி விடு
மலராகும்போது தான் மணமாகி ....

காற்றில் கரைய முடியும் ...

சுய ஒழுக்கத்தின் மணம் காற்றின்
போக்கை எதிர்த்து ....

உலகின் அந்தம் வரை போக
முடியும் ...

உண்மையிலேயே சுய ஒழுக்கம்
உள்ளவன் சுதந்திரமானவன் ...

தன்னுடைய அக ஔியின்றி யாரையும்
அவன் பின்பற்றுவதில்லை ...

தன்னுடைய நெஞ்சத்துக்கு உண்மையாக
அவன் வாழ்கிறான் ...

பழக்க வழக்கங்களால் வளர்த்துக்
கொள்வதல்ல ஒழுக்கம் ....

சுய ஒழுக்கம் என்பது தியானம் என்னும்
மலரின் மணம் ...

ஓஷோ ...
தம்ம பதம் 1 ....

Comments