Google

மகிழ்ச்சி - OSHO



ஒரு நிகழ்ச்சி...

🌸 ஒரு பெண், மிகவும் கோபமாக, 
கதவைத் தள்ளிக் கொண்டு...

திருமணப் பதிவு அலுலகத்துச்
சென்று, அங்குள்ள அதிகாரியிடம்...

🌸 "ஜான் ஹென்றியை, 
கல்யாணம் செய்துகொள்ள...

நீங்கள் அனுமதி அளித்தது...
உண்டா, இல்லையா;

இதோ பாருங்கள்" என்று கத்தியபடி...

அவர் உத்தரவு கொடுத்த பேப்பரை, 
அவர் மேஜைமேல் போட்டாள்...

🌸 அவரும் அதை எடுத்து, 
உன்னிப்பாக கவனித்து...

"அப்படித்தான் நம்புகிறேன்...
என்ன ஆச்சு?" என்று கேட்டார்.

🌸 "அவன் ஓடிவிட்டான்...

இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று அதட்டிக் கேட்டாள்...

🌸 எல்லா உறவுகளையும்,
மேலோட்டமாகப் பார்த்தால்...

மிக அழகாகத்தான் இருக்கும்...

ஆனால், அதன் ஆழத்தில் ஒருவித 
கட்டுப்பாடு இருந்தே தீரும்...

🌸 அதற்காக, நீங்கள் மக்களை ஒதுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை...

அவர்களோடு அன்புடன் பழகுங்கள்...

🌸 ஆனால், எந்த உறவும் முடிவில் 
மகிழ்ச்சியைக் கொடுக்காது...

என்ற உணர்வு உங்களிடம் இருக்கட்டும்...

🌸 ஏனென்றால், 
உண்மையான மகிழ்ச்சி என்பது...

உங்களது 'உள் உணர்வாக' மேலே வருவது...

🌸 அது வெளியிலிருந்து வருவதல்ல...

"அப்படி ஏதும் வந்தால்...
அது நிலையற்றது...

அது ஒரு கனவுக்குச் சமம்தான்"...

🌻 ஆகவேதான், சாரஹா...

"எவன் ஒருவன், 
வெளியிலிருந்துதான் மகிழ்ச்சி வருகிறது என்று நம்புகிறானோ....

அவன் கட்டுப்படுத்தப்படுகிறான்."

🌻 "எவன் ஒருவன், 

அது தன் 'உள் உணர்வாக' 
வெளிப்படுகிறது என்று உணருகிறானோ...

அவன் சுதந்திரமானவனாகிறான்."

🌻 இவன்தான்,
'உண்மையான மனிதன்' என்கிறார்.

🌿ஓஷோ🌿

Comments