குடும்பத்தோடு இருந்தாலும் தனியாளாக இரு - OSHO
குடும்பத்தோடு இருந்தாலும் தனியாளாக இரு
வீட்டில் இரு.
கிரகஸ்தனாக இரு.
உன் மனைவியோடு இரு.
உன் குழந்தைகளோடு இரு.
என்றாலும் பற்றில்லாமல் வாழ்ந்துவிடு......!!!
ஏனென்றால் வீட்டையும் மனைவியையும் மக்களையும் விட்டுவிட்டுக் காட்டுக்கு ஓடிப்போனால் அவர்களோடு அதிகப் பற்றோடு இருந்ததைத்தான் பறைசாற்றுகிறாய்.....!!!
இல்லையேல் ஏன் பற்றைப் பற்றிய கவலை இருந்திருக்க வேண்டும்.....???
பற்றிருக்கிறது என்றால் காட்டுக்குப் போய்விடுவதால் மட்டும் பற்று விலகிப் போய்விடுமா என்ன....???
"எதுவும் இல்லையெனும் போது அவற்றின் தேவையை அதிகமாக உணர்ந்து அவற்றின் மீது அதிகப் பற்று வைப்பதுதான் நடக்கப் போகிறது."
பசியாக இருக்கும்போது உணவைப் பற்றிய சிந்தனையே எப்போதும் இருக்கிறது.
மனைவியிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் போது காம உணர்வு அதிகமாகிப் போகிறது.காமதுய்ப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க முடியாமல் போய்விடுகிறது.
கடவுள் மீது பக்தியுடையவனாக இருக்கவேண்டும் என்றால் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று உண்மையாகவே ஆசை இருக்குமானால் 'பற்றில்லாமல் வாழ்.'ஆனால் வாழ்ந்திரு.
பற்றில்லாமல் இருப்பது வாழும் ஒரு வகையாக இருக்க வேண்டும். துறந்துவிடுவதாக இருக்கக்கூடாது.
பற்றில்லாமல் வாழ்ந்திரு. ஆனால் உலகில் இருப்பதை வலியுறுத்தியிரு வாழ்ந்திரு.
மெல்ல மெல்ல தற்கொலை செய்து கொண்டிருக்காதே.
வாழ்வை முழுக்க வாழ்ந்து கழித்துவிடு.
வீடிருந்தும் வீடில்லாதவனாக வாழ்.
குடும்பத்தோடு இருந்தாலும் தனியாளாக இரு.
கூட்டத்தோடு பழகு.ஆனால் கூட்டத்தில் ஐக்கியமாகி விடாதே.
சந்தைக் கடையில் இரு......
ஆனால்.....
அகத்தியானத்தை இழந்து விடாதே......!!!
❤ஓஷோ❤
Comments
Post a Comment