Google

இப்போது வாழ்ந்து விடு - OSHO



இப்போது வாழ்ந்து விடு 

முட்டாள் எப்போதும் இன்றைய நாளை இனிவரும் நாளுக்காகத் தியாகம் செய்கிறவன் .

 அவன் நான் நாளைக்கு வாழப் போகிறேன் என்கிறான் .

எல்லாமும் சரியான பின் , சரியான நேரம் வந்த பின்  வாழப் போகிறானாம்  .

 நேரமிருக்க வேண்டும் . போதிய பணமிருக்க வேண்டும் .

வசிப்பதற்குத் பெரிய மாளிகை இருக்க வேண்டும் .

அப்போது நான் வாழ்வேன் என்கிறான் .

இப்போதைக்கு எப்படி நான் வாழ்வது என்கிறான் ?

அந்த சரியான நாள் எப்போதும் வரப் போவது இல்லை .

நிகழ்காலத்தை எதிர்காலத்துக்காகத் தியாகம் செய்கிறான் . இந்த கனத்தை அடுத்த கணதுக்காகத் தியாகம் செய்கிறான் .

இது தான் முட்டாள்தனம் .. வாழ்வதைத் தள்ளிப் போடுவது . நெஞ்சம் இப்போது வாழ்ந்து விடு என்கிறது . அதனால் தான் லாவோத் சூவும்  இப்போது வாழ்ந்து விடு என்கிறார் .

ஓஷோ 🎊

Comments