கொண்டாடு
எதிர் பார்க்கும் போது விரும்பும் போது
ஆசைப்படும் போது நீ பிரச்சினைகளை
உருவாக்கிக் கொள்கிறாய் ..
நீ முழுமையோடு சேர்ந்து நகராமல்
உனக்கென்று தனியாக குறிக்கோள்களை
வைத்துக் கொள்கிறாய் ..அப்போது அங்கே பிரச்சினைகள் தோன்றி நோய்
ஏற்பட்டு விடுகிறது ..
என்ன கிடைத்தாலும் சரியே என்று ஏற்றுக் கொள்ளும்போது வாழ்க்கை ராஜநடை
போடுகிறது ..என்ன கிடைக்கிறதோ அதை
விரும்பி ஏற்றுக் கொண்டு அதை அனுபவி ..
இருப்பதை உன்னால் விரும்ப முடியும் என்றால்
எந்தப் பிரச்சினையும் இல்லை ..எப்படி இருக்கிறாயோ அதுவே சரி என்பதை உணர்ந்திடு ..
தானாகவே மேலும் சரியானவனாகிப் போவாய் ..
முழுமையை விட புத்திசாலித் தனமாக உன்னால் இருக்க முடியாது ..எதை நீ ஒதுக்கினாலும் அதை புரிந்து கொள்ளாமலே போய் விடுகிறாய் ..ஆனால்
ஒன்றை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் போது அதனுடன் தோழமை கொள்கிறாய் ..
நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை ஏற்றுக்கொள் ..அப்படியே உன்னை அனுபவி ..
இதைவிட சிறந்தது ஒன்று இருக்க முடியாது
என்று அதை கொண்டாடு ..
ஓஷோ ..
தாவோ மூன்று நிதியங்கள் 2
புத்தர்களும் மூடர்களும் ..
Comments
Post a Comment