உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய் - OSHO
உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில்
உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்
நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே
உன் வாழ்க்கை இருக்கட்டும்
உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்
நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்
ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போதுதான் உன்னால் அடைய முடியும்
இல்லையென்றால்
அகந்தை எப்போதும் ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு
அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்
நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்....???
ஏனென்றால்.
நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை
அப்படியானால்
நீ கவனிக்கப்படுவதன் மூலம்
நீ யார் என்பது எப்படிப் புலனாகும்...???
நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது
அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ
அந்தக் கண்கள் கண்ணாடியை விட மேம்பட்டதாக இருக்க முடியாது,
நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள்தான்
நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்
நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்
கவன ஈர்ப்பில்தான் அகந்தை வாழ்கிறது
அது ஒரு தவறான விஷயம்
அதைப் புரிந்து கொண்டு
அதிலிருந்து வெளியே வாருங்கள்
நீ அதிலிருந்து மீண்டுவிட்டால்
வித்தியாசமான ஒரு அமைதியும்
நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்
இயற்கையான, தங்கு தடையற்ற பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்
ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும்
உட்புற நடனம் மட்டுமே
தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்
அதை நீ அடையாத வரையில்
நீ வாழ்வது போலியான வாழ்க்கை
நீ யாரையும் ஏமாற்றவில்லை
ஆனால்
உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய் 🎀
🎗ஓஷோ 🎗
Comments
Post a Comment