Google

இறப்பதற்கு எப்படித் தயார் செய்து கொள்வது?

பற்று
இறப்பு
எதிர்கொள்ளல்...



🍁"அன்புள்ள ஓஷோ! 

இறப்பதற்கு, எங்களை நாங்களே 
எப்படித் தயார் செய்து கொள்வது?"

🌸 "எதையும் சேர்த்து வைக்க 
விரும்பாதீர்கள்.

அது, அதிகாரமாகட்டும், பணமாகட்டும், அந்தஸ்து, புண்ணியம், விஷய ஞானம்...

ஏன், உங்களுடைய ஆத்மீக அனுபவமாகட்டும், எதையும் 'என்னுடையது' என்று சேர்த்து வைக்காதீர்கள்..."

🌸 இப்படி எதையுமே 
சேர்த்து வைக்காவிட்டால், 

எந்த நேரமும், 
நீங்கள் இறப்பதற்குத் தயாராக இருப்பீர்கள்...

ஏனெனில், அப்பொழுது நீங்கள் 
எதையும் இழக்கப் போவது இல்லை...

🌸 "யாரும், இறப்பைக் கண்டு  
பயப்படவில்லை...

நீங்கள் வாழ்க்கையில் சேகரித்தவைதான், உங்களுக்கு மரண பயத்தை
உண்டு பண்ணுகின்றன..."

🌸 மரணம் நெருங்கும் பொழுது...

நீங்கள் இதுவரை, 
உங்கள் சக்தியை எல்லாம் செலவழித்து சேகரித்தவற்றோடு, ஒட்டிக்கொள்ளவே ஆசைப்படுகிறீர்கள்...

ஜீசஸ் சொன்ன, 

"உங்களுடைய உயிர்த்தன்மை,

எந்தவித சேர்த்து வைத்தல் 
இல்லாமல், எளிமையாக...

ஏன், உள்ளே வறுமையாக இருந்தால்,

அவர்களே, 
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்" 
என்பதன் அர்த்தம் இதுதான்...

🌻இதற்காக நான், 
உங்களை பிச்சை எடுத்து, 

இந்த உலகத்தைத் துறந்து வாழுங்கள் 
என்று சொல்லவில்லை...

நான் சொல்ல விரும்புவது 
என்னவென்றால்,

"நீங்கள் உலகத்திலேயே இருங்கள்...

ஆனால்,
நீங்களே உலகமாக மாறிவிடாதீர்கள்" 
என்பதே...

🌻எதையும் உங்கள் மனதில் 
சேர்த்து வைக்காதீர்கள், 

உங்கள் உள்ளே,
நீங்கள் வறுமையோடு இருங்கள்.

எதையும், என்னுடையது என்று சொந்தம் கொண்டாடாதீர்கள், அப்பொழுது நீங்கள் எந்த துன்பமும் இன்றி இறக்கலாம்.

🌻வாழ்க்கை உங்களுக்கு 
பிரச்சனையே இல்லை...

"என்னுடையது" என்ற எண்ணம்தான் 
பிரச்சனை.

எவ்வளவு அதிகமாக சேர்த்து
வைக்கிறீர்களோ, 

அந்த அளவுக்கு, நீங்கள் இறக்கும்பொழுது அவைகள் உங்களுக்குத் 
துன்பத்தைக் கொடுக்கும்...

🌸உங்கள் ஆத்மா, 

"என்னுடையது" என்பவற்றினால் 
அசுத்தப்படாமல் இருந்தால்...

ஏன், வறுமையாக இருந்தால்...
நீங்கள் எந்த நேரமும் 
இந்த உலகத்தைவிட்டுச் செல்லலாம்...

🌸இறப்பு உங்களை வந்து தட்டும்பொழுது,  
நீங்கள் அதற்குத் தயாராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடையும்...

நீங்கள் அப்பொழுது 
இழப்பதற்கு ஒன்றுமே இல்லை...

அப்படி இருக்கும் பொழுது...

"வாழ்வு என்னும் அனுபவத்தில் இருந்து...
இறப்பு என்ற புதிய அனுபவத்திற்கு... செல்லுகிறீர்கள்... "

அவ்வளவுதான்.

🌿ஓஷோ🌿

Comments