அறியாததற்குள் - OSHO
ஓஷோ💗✍
🌸 சாக்ரடீஸ்,
தன் மரணப்படுக்கையில்
மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்...
அதன் காரணம் அவரது சீடர்களுக்குப் புரியவில்லை...
🌸 கிராடோ என்ற சீடன் குழப்பம் அடைந்து...
"குருவே நீங்கள் எதற்காக
இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்...???"
என்று வினவினான்...
🌸 அதற்கு சாக்ரடீஸ்...
"நான் ஏன் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது..???"
எனக்கு வாழ்வு என்பது தெரியும்...
இப்பொழுது மரணம் என்பது என்ன...???
என்பதை அறியச் செல்லுகிறேன்
🌸 விளங்கிக் கொள்ள முடியாத...
அந்த நிகழ்ச்சியின் வாயிலில் தற்போது நிற்கிறேன்
எனக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கிறது
🌸 "நான் இதுவரை அறிந்திராத
ஒன்றினுள் நுழைய இருக்கிறேன்
என்னுள் ஓர் ஆச்சரியம் நிகழ இருக்கிறது,
இதற்கு மேல் என்னால் தாமதிக்க இயலாது" என்றார்
🌸 ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்...
சாக்ரடீஸ் ஒரு மதவாதி அல்லர்
அவர் எதையும் ஒரு போதும் நம்பியது இல்லை
🌸 சாக்ரடீஸிடம் ஒருவர்...
"மரணத்திற்குப் பிறகு ஆத்மா வாழும் என்று உங்களால் தீர்மானமாகக் கூறமுடியுமா..???" என்று கேட்டார்
அதற்கு சாக்ரடீஸ்
"எனக்கு தெரியாது" என்றார்
🌻 "எனக்குத் தெரியாது" என்று ஒருவர் இந்த உலகத்தில் சொல்ல மிகுந்த தைரியம் தேவை
🌻 ஒரு மொழி ஆசிரியன்
"எனக்குத் தெரியாது" என்று சொல்ல மிகுந்த கஷ்டப்படுவான்
🌻 ஆனால் சாக்ரடீஸ் மிகுந்த நேர்மையான மனிதர்
அதனால்தான் அவரால்
"எனக்குத் தெரியாது"
என்று தைரியமாகச் சொல்ல முடிந்தது
🌻 பிறகு அந்த சீடர் மறுபடியும் கேட்டார்
"ஆத்மா மரணத்துக்கு
பிறகு வாழவில்லை என்றால்,
நீங்கள் எதற்காக இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்...???"
🌻 அதற்கு சாக்ரடீஸ்...
"நான் இறந்த பிறகுதான் அதை தீர்மானிக்க வேண்டும்
ஆத்மா மரணத்திற்குப் பிறகு வாழ்ந்தால்,
எனக்கு மரணத்தைப் பற்றி எந்த பயமும் கிடையாது
அது அப்புறம் வாழவில்லையென்றால்,
எனக்கு எப்படி பயம் தோன்றும்..???
ஏனெனில்
என் ஆத்மா வாழவில்லையென்றால்...
நானே வாழவில்லை என்று அர்த்தம்" என்றார்
🌸 "ஆகவே அதுபற்றி பயப்பட ஒன்றும் இல்லை
இப்பொழுது என்னால்
என் ஆத்மாவுக்கு என்ன நேரிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது
ஆகவேதான் அதை அறியும்
ஆவலில் அந்நிகழ்ச்சியைச்
சந்திக்க இருக்கிறேன்
🌸 என்னைப் பொறுத்தமட்டில்
ஒரு தெய்வ நம்பிக்கை உள்ள மனிதன் இப்படிதான் இருப்பார்
தெய்வ நம்பிக்கை உள்ளவன்
ஒரு கிருஸ்துவனாகவோ...
ஓர் இந்துவாகவோ அல்லது
முகமதியனாகவோ இருக்க
வேண்டிய அவசியமில்லை
🌸 இந்த முத்திரைகள்...
உங்களுடைய விஷய ஞானத்தை அதிகரிக்க மட்டுமே உதவும்
ஒரு கிறிஸ்தவன்,
"எனக்குத் தெரியும்" என்று சொன்னால்
அவனுக்கு விஷயம், கிறிஸ்தவ நூல்களிலிருந்து வந்ததாகத்தான் இருக்க முடியும்
🌸 அதேபோல், ஓர் இந்துவுக்கு
கீதை, வேதம் போன்ற நூல்களிலிருந்து
வந்ததாகதான் இருக்க முடியும்
🌸 ஒரு இந்து, கிறிஸ்தவனுக்கு மாறாகவே இருப்பான்
இந்து, நான் சரி, நீ தவறு என்பான்...
கிறிஸ்தவன் நான் சரி, நீ தவறு என்பான்...
🌸 இதைப்போல பல
வாதப்பிரதிவாதங்கள்,
சண்டைகள், சச்சரவுகள்,
பட்டிமன்ற விளக்கங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும் 🌸
💮 ஓஷோ 💮
💮🤘மனம் இறக்கும் கலை🤘💮
Comments
Post a Comment