Google

சுவாசம்தான் சிறந்தவழி - OSHO



மனதில் வெகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணியை மாற்றவேண்டுமென்று கருதினால், சுவாசம்தான் சிறந்தவழி.

 மனதின் எல்லாபழக்கங்களுமே சுவாசத்தின்பாணியை பொறுத்தே இருக்கிறது.

 சுவாசத்தின் பாணியை மாற்றுங்கள், உடனே மனது மாறும்!

முயன்று பாருங்கள்!

*மூச்சை வெளியே விடுவதிலிருந்து துவங்குங்கள்*,

எதையாவது வெளியே தூக்கி எறிய நினைத்தால்,
மூச்சை வெளியே விடத்துவங்குங்கள்.

குறைந்தது ஐந்திலிருந்து பத்து முறை!

மூச்சை முழுவதுமாக வெளியேற்றி விடுங்கள்!

உடம்பு தானாகவே மூச்சை உள் இழுத்துக்கொள்ளும்!

 ஒரு புதிய காற்று உள்ளே வந்திருக்கிறது.

 நீங்கள் அந்த பழைய எண்ணத்தில்  இல்லை !

இது எல்லா  தேவையற்ற பழக்கத்திலும், எண்ணத்திலும்  விடுபட உதவும்!

உதாரணமாக, நீங்கள் புகைபிடிக்கிறீர்கள்.,

 புகைக்கவேண்டுமென்கிற உந்துதல் வரும்போது,
உடனே புகைபிடிக்காதீர்கள்

 அப்போது மூச்சை வெளியே விடுங்கள்,

 அந்த உந்துதலை தூக்கி வெளியேஎறியுங்கள்.

புதியகாற்றை உடல் தானாகவே இழுத்துக்கொள்ளும்!

உடனே அந்த உந்துதல் போய்விட்டதை காண்பீர்கள்.

உள்மாற்றத்திற்கு இது மிக,மிக முக்கியமான கருவியாக இருக்கும்.

*#ஓஷோ*

Comments