உயர்தரமான அறிவு? - OSHO
ஓஷோ
🍁 'ஞானி சன்கிரிதி'
சூரியக் கடவுளிடம் சொன்னார்:
"ஓ, இறைவா,
அருள்கூர்ந்து எனக்கு மிகவும் உயர்தரமான அறிவைப் போதியுங்கள்."
ஓஷோ:
🌸 அவர் ஒரு அபத்தமான
கேள்வியைக் கேட்கிறார்...
"தயவு செய்து மிகவும்
உயர்தரமான அறிவை போதியுங்கள்."
🌸 இதை போதிக்க முடியாது...
கற்றுத் தர முடியாது...
"ஆனால், ஒரு சீடன் இப்படித்தான்
குருவை அணுக வேண்டும்..."
🌸 உபநிஷதங்களுக்கு 'உயர்தரமான அறிவு' மட்டுமே தெரியும்...
'உயர்தரமான அறிவு' என்றால் என்ன?
வெளியிலிருந்து சேகரிக்கப்படும்,
அறிவு அல்ல இது...
வேறு எங்குமே பெறமுடியாத அறிவே...
'உயர்தரமான அறிவு'
🌸 இது உங்களுக்குள் நிகழ்கிறது...
இது உங்களுக்குள் மலர்கிறது...
இதை உங்களுக்கு கற்றுத் தர முடியாது!
🌸 முதலாவது வித்தியாசம்...
எந்த அறிவைக் கற்றுக் கொடுக்க முடியுமோ...
அந்த அறிவு, கீழான அறிவு என்று சொல்லப்படுகிறது...
உபநிஷதங்கள்,
இந்த அறிவை கீழான அறிவு
என்று சொல்லுகின்றன...
இதை உபநிஷங்கள் 'அவித்யா' -- அதாவது,
'விஷயங்கள் தெரிந்திருக்கும் அறியாமை'
என்று அழைக்கின்றன...
🌸 ஏனெனில்,
எது உங்களுக்குக் கற்றுத் தரப்படுகிறதோ...
அது உங்கள் மனதில்தான் நிற்கிறது.
"அது 'உங்களைச்' சென்று அடைவதில்லை!"
🌸 நீங்கள் தொடப்படாமலே இருக்கின்றீர்கள்...
உங்கள் 'மையம்' தொடப்படாமலேயே இருக்கிறது...
மனம் மட்டுமே இதை சேகரிக்கிறது...
மூளையின் அணுக்கள் இதனைச் சேகரிக்கிறது...
🌸 இது ஒரு கம்யூட்டருக்குள்
செலுத்தப்படும் விஷயங்களைப் போல்,
இவை உங்கள் மனதிற்குள் செல்லுகின்றன...
ஒருவரின் மூளை...
"இந்த உலகத்திலுள்ள
நூலகங்களின் நூல்கள் அனைத்தையும்...
ஏற்றுக் கொள்ளமுடியும்.
ஒரே தலையில் அடக்கிவிட முடியும்...
🌸 ஆனால்,
உபநிஷங்கள் சொல்லுகின்றன:
"இதனால் நீங்கள் அறிவுடையவராக
ஆக முடியாது.'
இது இயந்திரத்தன்மையானது.
இதற்கு உள்ளுணர்வு தேவையில்லை...
இதை ஒரு கம்யூட்டர் செய்யமுடிமானால்,
இது அவ்வளவு மதிப்புடையதல்ல!
🌸 "கம்யூட்டரால் செய்ய இயலாதுதான்,
'உயர்தரமான அறிவாகும்.'
ஒரு கம்யூட்டர்,
தன்னைத் பற்றி தெரிந்து கொள்ளக்
கூடியதாக ஆக முடியாது...
ஒரு கம்யூட்டருக்கு,
தன்னை உணர்ந்து கொள்ளுவதற்கான சாத்தியமே கிடையாது...
🌸 கம்யூட்டருக்குள் செலுத்தப்படாத விஷயம்,
அதற்கு நிகழப் போவதில்லை...
மனிதனும் இதே மாதிரிதான்
என்றால்,
பிறகு அங்கு ஆத்மா
என்பது இல்லை!
🌸 பிறகு நீங்களும்,
ஒரு இயற்கையான கம்யூட்டராகி விடுவீர்கள்...
உங்களிடமிருந்து வெளிவருபவைகள் எல்லாம்,
ஏற்கனவே உங்களுக்குள் புகுத்தப்பட்டவைகளாக இருந்தால்...
உங்களுக்குள் என்ன புகுத்தப்பட்டதோ,
அதே அளவு நீங்கள் வெளிப்படுத்தினால்...
புதிதாக ஏதேனும் நிகழாமல் இருந்தால்...
உங்களுக்கு ஆத்மா இல்லை.
பிறகு நீங்கள்,
"ஒரு நுணுக்கங்கள் நிறைந்த
இயந்திரம்தான் -- அவ்வளவுதான்."
🌸 உள்ளுக்குள் நிகழ்கின்றதையே 'உயர்தரமான அறிவு' என்று
உபநிஷதங்கள் கூறுகின்றன...
உபநிஷதங்கள் சொல்லுகின்றன...
இந்த உயர்தரமான அறிவைப் பெற
ஒரு வழி இருக்கிறது...
இந்த அறிவைப் பெற சாத்தியம் உள்ளது...
🌸 ஆகவே, இதைப் போதிக்க முடியாது என்றால் குருநாதர் என்ன செய்ய வேண்டும்?
இதனால்தான்,
நான், 'குருநாதர்,
ஒரு ஆசிரியர் அல்ல' என்று சொல்லுகிறேன்!
தொடரும்...
🌿ஓஷோ🌿
☘ஞானத்திற்கு ஏழு படிகள்☘
Comments
Post a Comment