தியானம் என்பது மனம் கழிந்த நிலை
தியானம் என்பது மனம் கழிந்த நிலை ..
அதாவது மனதைக் கடந்து செல்லும் நிலை ..
(transcendence of mind ) அந்த நிலையில்
எந்த எண்ணமும் சாத்தியம் இல்லை ..
Contemplation என்பது ஒரு குறிப்பிட்ட
எண்ணத்தின் மேல் கூர்மையான கவனத்தைச்
செலுத்துவது ..இந்த contemplation என்ற வார்த்தையில் இருந்து தான் temple என்ற
வார்த்தை வந்தது ...
அதாவது எண்ணத்தின் பரிசுத்தமான
நிலை .. கோவிலுக்கு போகும் போது
பரிசுத்தமான எண்ணத்துடன் செல்வது ...
ஒரே எண்ணத்துடன் இருப்பது ...
ஆனால் தியானம் என்பது பரிசுத்தமான
எண்ணத்தையும் கடந்து போவது ..
எல்லா எண்ணங்களும் முடிந்து போன
நிலைக்கு போய் விடுவது ..பரபூரண பிரக்ஞை நிலைக்குப் போய் விடுவது ...
மனம் எண்ணங்களை கடந்து ஆன்மாவில்
ஒன்றிவிடுவது ..முழுமையான பிரக்ஞை நிலை
முழுமையான ஆன்ம உணர்வு நிலை ...
ஒரே ஒரு நாள் போதும் இருபத்தி நான்குமணி நேரம் ...தியானத்தில் இருந்தால் அது போதும் ...
நீங்களும் புத்தராகிப் போகலாம் ...
மகாவீரர் சொல்கிறார் நாற்பத்தெட்டு நிமிடம் தொடர்ந்து மனம் கழிந்த நிலையில்
இருந்தால் போதும் ..நீங்களும் ஞானம் பெற்று
விடலாம் ...
ஆனால் சாதாரணமாக மனதால்
சில விநாடிகள் கூட எந்த எண்ணமும் இல்லாமல் இருக்க முடிவதில்லை ..சில விநாடிகள் கூட மனதால் சுதாரித்து கவனித்து இருக்க முடிவதில்லை ...
ஏதோ ஒரு சில விநாடிகள் எண்ணமற்ற
நிலை கிடைத்தாலும் அப்போது கூட எந்த எண்ணமும் இல்லை என்ற எண்ணம் வந்து வடுகிறது ..எந்த எண்ணமும் இல்லை என்ற
நினைப்பும் ஓர் எண்ணமே ...
ஓஷோ ...
தம்ம பதம் 4 ..
Comments
Post a Comment