இதுவரை உங்களை வெளிப்புறமாகவே பார்த்துவந்துள்ளீர்கள்
இதுவரை உங்களை வெளிப்புறமாகவே பார்த்துவந்துள்ளீர்கள்.குறிப்பாக உங்களை கண்ணாடியில்.
இந்த நிலையில் உங்கள் உள்புறம் என்ன இருக்கிறது என்று உங்களால் ஒருநாளும் அறியமுடியாது.
உங்கள் உள்ளே உள்ள உண்மையான தன்மையை இதுவரை நீங்கள் பார்த்தது கிடையாது.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மிக ஓய்வாக கண்களை மூடிக்கொண்டு கால்களில் ஆரம்பித்து உங்கள் உள் உருப்புகளை மெதுவாக பார்த்துக்கொண்டு மேலே வாருங்கள்.
அப்படி மேலே வரும்போது உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் சிறிது நேரம் அந்த இடத்தை பாருங்கள்.உங்கள் முழு கவனிப்புதன்மையும் அங்கு இருக்கட்டும்.
பிறகு மேலே வாருங்கள்.இப்படி தொடர்ந்து செய்ய அனேக அற்புதங்கள் நிகழும்.
இப்படி தொடர்ந்து உங்களை பார்க்க கற்றுக்கொண்டால்.நீங்கள்தான் உடம்பு என்ற உணர்வு உங்களை விட்டு அகலும்.
இந்த பயிற்சி தொடர உங்களை விட்டு தனியே வெளியே வந்து உங்களையே பார்க்க முடியும்.
உங்கள் மனதையே ஒரு அந்நியப்பொருளாகவும் பார்க்க முடியும்.
இந்த நிலையில் நீங்கள் மனதிடமிருந்து விடுதலையடையவும் முடியும்.
__ஒஷோ.
Comments
Post a Comment