Google

உண்மையான அன்பு என்றால் என்ன? - OSHO




நீங்கள் பேராசையற்று இருந்தால்தான், உங்களுக்கு
உண்மையான அன்பு என்றால் என்ன என்பது விளங்கும்.
பேராசையற்ற மனம்தான் மதத்தன்மை யுடையதாகிறது.
உங்களுடைய பேராசையில், அது எந்த வித்தியாசத்தையும்
காணுவதில்லை. அது செல்வமாகவோ, அல்லது ஆதிக்க
சக்தியாகவோ, அல்லது புகழாகவோ அல்லது விடுதலை
யாகவோ இருந்தால்கூட அல்லது கடவுளாக இருந்தால் கூட.
நீங்கள் பேராசை கொண்டு இருந்தால், உங்களுடைய மனம்
வேறு எங்கேயோதான் சென்று கொண்டு இருக்கிறது. எதையோ
நோக்கி, நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதையோ நோக்கி
ஓடிக்கொண்டு இருக்கிறது. அது எதையோ அடைவதற்கு,
எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. அது. ஏற்கெனவே
இருக்கும் தன் இருப்பில் ஒரு போதும் நிலையாக இருப்பதே
இல்லை.
அடைவதற்கு ஒரு தடங்கலாக அமைந்துவிடுகிறது.

ஓஷோ

Comments