Google

இயேசு சிலுவையில் இறந்தாரா? - OSHO



இயேசு  சிலுவையில் இறந்தாரா

தன்னுள்ளே உள்ள சந்திர நிலையை நோக்கிச் செல்லும்
போது, அவர் சிலுவையில் அறையப்பட்டார். யாராவது, சந்திர
நிலையின் மையத்துக்கு முதன் முதலில் வரும்பொழுது
அவருடைய மூச்சு நின்றுவிடும். ஏனென்றால், மூச்சுவிடுதல்
கூட சூரிய நிலையின் செயல்பாடுதான். இப்பொழுது எல்லாமே
இறந்தது போல் அமைதி நிலையை அடைந்து விடுகிறது. அவர்
இறந்துவிட்டார் என்றே எல்லோரும் கருதினார்கள்; ஆனால்
அவர் இறக்கவில்லை. மூச்சு நிற்கக் கூடிய, சந்திர மைய நிலைக்கு
அவர் வந்துவிட்டார். அவ்வளவு தான். மூச்சு உள்வாங்குதலும்
இல்லை மற்றும் மூச்சு வெளியிடுதலும் இல்லை. எந்த
இடைவெளியும் இல்லை.
ஏதாவது ஒன்று, இடைவெளியில் தங்கினால் அந்த ஆழமான
சமநிலை முழு இறப்பை உண்டு பண்ணிவிடும். ஆனால், அது
இறப்பு இல்லை, ஆனால், அவரை சிலுவையில் அறைந்த
சிப்பாய்கள் அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்தார்கள்.
ஆகவேதான் இயேசுவின் சீடர்கள், அவருடைய உடலை
சிலுவையில் இருந்து இறக்க அனுமதித்தார்கள். ஆனால், அவர்
உண்மையில் இறக்கவில்லை, அந்த உடல் கிடத்தப்பட்ட
குகையை, மூன்று நாட்களுக்குப் பிறகு திறந்தபொழுது, அங்கு
அந்த உடலைக் காணவில்லை. அந்த 'இறந்த' உடல்
மறைந்துவிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அவரை மீண்டும்
4 அல்லது 5 பேர் பார்த்தார்கள், ஆனால் அவர்கள்
கிராமத்துக்குச் சென்று இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார்
என்று கூறியபொழுது, யாரும் அவர்களை நம்பவில்லை..
சென் றார். பிறகு அவர் அங்கேயே தங்கிவிட்டார். பிறகு,
இயேசு, ஜெரூசலத்திலிருந்து தப்பித்து, காஷ்மீருக்குச்
அவருடைய வாழ்க்கை, இயேசுவின் வாழ்க்கையாக இல்லை;
கிறிஸ்துவின் வாழ்க்கையாகி விட்டது. இயேசு என்பது
சூரியநிலை; கிறிஸ்து என்பது சந்திரநிலை, பிறகு அவர்
முழுமையான அமைதியில் ஆழ்ந்துவிட்டார். ஆகவேதான்,அவரைப்பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. அவர் பேசுவது
இல்லை; அவர் எந்த போதனையையும் செய்வதில்லை, அவர்

காஷ்மீரிலேயே தங்கிவிட்டார்- ஒரு புரட்சிக்காரராக அல்ல,
ஒரு குருவாக, தனது அமைதியில் வாழ்பவராக. ஒரு சிலர்
தானே உணர்ந்தவர்கள் தான், அவரை நோக்கி வந்து, அவரோடு
அவரோடு சேர்ந்து இருக்க வந்தார்கள். அவருடைய இருப்பை
இருந்தார்கள். இந்த உலக மக்கள் தொகையை ஒப்பிட்டால்,
அது மிகக் குறைவுதான்; ஆனால் உண்மையில் அவர்களது
எண்ணிக்கை பெரியது தான்.
இயேசுவின் இளமைக்கால புரட்சித்தன்மையை மட்டும்
அறிந்ததால், கிறிஸ்துவம் முற்றுப் பெறாமலேயே இருக்கிறது.
இதனால் தான், கிறிஸ்துவம், கம்யூனிஸத்தை உண்டாக்கி
விட்டது. ஆனால், இயேசு, ஒரு முழு விளக்கம் பெற்ற
ஞானியாகவே இறந்தார். ஒரு பெளர்ணமி நிலவைப் போல.

ஓஷோ
எதிர்ப்பிலேயே வாழுங்கள்
பக்கம் 262 .263. 264.

Comments