Google

மனிதனுடைய வாழ்க்கை முறை வெளி உலக தொடர்பில் - OSHO




மனிதனுடைய வாழ்க்கை முறை எப்போதும் சுற்று வட்டத்திலேயே வெளி உலக தொடர்பில் மட்டுமே அமைந்ததாகி விட்டது ...

புற உலக வாழ்க்கைதான் சுற்று வட்டம் இது மனதால் வாழ்வது ..இதைத்தாண்டி அக உலக வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது ...அவன் ஒரு போதும் அந்த உள் மையத்தைக் கண்டு கொள்வதே இல்லை ..

ஒரு மனிதன் தான் தனியாக இருக்கும் போது கூட மனதில் ஒரு கூட்டத்தோடு தான் இருக்கிறான் ...
அவன் எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறான் ...

மனிதன் உறங்கும் போது கூட மற்றவர்களைப் பற்றியே கனவு காண்கிறான் ... தன்னோடு தன் உணர்வோடு ஒருபோதும் அவன் உள்ளுக்குள் உறங்குவதே இல்லை ...

வாழ்க்கையை வெளி வட்டத்தில் வாழ்வதன் மூலம் மட்டும் அறிந்து கொள்ள முடியாது ..அவனுடைய உள்  மையத்தைப் பற்றியும் அறிந்து வாழ வேண்டும் ..

மனிதன் வெறும் நம்பிக்கையில் என்றாவது ஒரு நாள் எங்கேயாவது ஏதாவது அதிசயம் நடக்குமா என்று காத்துக் கிடக்கிறான் ..

அதை நம்பி இந்தக் கணத்தில் வாழாமல் அதை வீணாக்கிக் கொண்டிருக்கிறான் ...எது நடந்தாலும் அது இந்தக் கணத்தில் மட்டுமே நடக்க முடியும் ...

மனிதன் தன்னுடைய உள் மையத்தில் மையம் கொள்வதன் மூலமே இந்தக் கண நேரத்தைக் கண்டு 
கொள்ள முடியும் ...

#ஓஷோ ...
தந்தரா 
ரகசியங்கள் 1

Comments