Google

நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம் - OSHO

#தியானம்!!!



நீங்கள் கண்களை மூடி தியானம் 
செய்ய ஆரம்பத்தீர்கள் என்றால் 
சிறிது நேரத்தில்   சோர்வு வரும் ,  சலிப்பு வரும் ,

உடனே கண்ணை திறக்க வேண்டும் என்கிற ஆர்வம் 
வரும் . 

 உங்களால் சிறிது நேரம் கூட கண்ணை மூடி 
உட்கார முடியாது ..  

காரணம் என்ன?

நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம் 
மனம் இறக்கும்  கணம் ஆரம்பமாகி விடுகிறது .

தான் மரிக்காமல் இருக்க அது பல வித்தைகளை ,
பல காரணங்களை எழுப்பி உங்களை தியானம் 
செய்ய விடாது ..  

 நீங்களும் தியானம் செய்ய முடியவில்லை ,
தியானத்தில் உட்கார்ந்தால்  சோர்வு , சலிப்பு ,
வருகிறது என்று   நினைத்து எழுந்து விடுவீர்கள் ..   

இவையெல்லாம் மனம் தான் மரிக்காமல் இருக்க 
செய்யும் அதன்  தந்திரம் 

இந்த மனதின் தந்திரத்திலேயே பலர் வீழ்ந்து விடுகின்றனர் .

இதிலேயே தான் 

பெரும்பாலானோர் தியானம் அமைகிறது.

இந்த நிலையில்  நான் தினமும் தியானம் செய்தும் 
எனக்கு நிம்மதி , மகிழ்ச்சி இல்லை என்று  நினைக்கின்றனர்.

இந்த மனதை தாண்டாமல் நீங்கள் என்ன செய்தாலும் அது 
தியானமே ஆகாது .

 மனம் செய்யும்  வித்தைகளை எல்லாம்
நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டே இருந்தால்   
மனம் அடங்கி விடும் .. 

 உங்களுக்கு ஒரு நல்ல சேவகனாக 
மனம் மாறிவிடும் . ..  

தியானத்திற்கு  பிறகு நீங்கள் 
மனதை ஒரு கருவியாக செயல்படுத்துவீர்கள் .

அப்போது உங்களுக்குள் இது நாள் வரை இருந்த துயரம்,
துக்கம், மன அழுத்தம் , போர்  தன்மை , சலிப்பு 
எல்லாம் ஆவியாக மறைந்து விடும்.

கொண்டாட்டம்,ஆனந்தம்  என்கிற வார்த்தையின்  
உண்மையான பொருள் அப்போது புரிய வரும் .

நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால்  நீங்கள் 
எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும்  , 

உங்களுக்கு வாழ்வே  மகிழ்ச்சிகரமாக , ஆனந்தகரமாக 
 கொண்டாட்டமாக இருக்கும் .

*#ஓஷோ*

Comments