Google

விவேகம் - OSHO



விவேகம்
ஓஷோ

🌸ஒரு சீடன் தன் குருவிடம் வந்தான்...

"நான் ஒரு மிகுந்த சிரமத்தில்
இருக்கிறேன்..." என்றான்.

"என்ன சிரமம்?" என்று குரு கேட்டார்...

🌸சீடன் சொல்லத் தொடங்கினான்:

"இந்த ஊரில் இருக்கும் பெரிய செல்வந்தர் ஒருவர்
யாத்திரை செல்ல இருக்கிறார்...

அவருக்கு அழகிய மகள் இருக்கிறாள்...

அவளை என் பாதுகாப்பில் விட்டுச் செல்ல விரும்புகிறார்...

🌸நான் மிகவும் நேர்மையானவன் என்று...
பிறரால் மதிக்கப்படுபவன்...

"என்னென்ன நல்ல குணங்கள் உண்டோ...

அவைகளை எல்லாம் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்..."

🌸எனக்குப் பயமாக உள்ளது..

என்னுடைய சபலங்களைப் பற்றி எனக்குத் தெரியும்...

அவள் மிகமிக அழகானவள்
ஏற்கனவே அவள் மேல் ஒரு மயக்கம் உண்டு...

அதனால் இதை தவிர்க்க விரும்புகிறேன்...

🌸சுமார் ஒன்பது மாதங்கள்
என்னுடன் அவள் வசித்து வருவது...

என்மீதே எனக்கு நம்பிக்கை இல்லை...

நான் என்ன செய்வது?

🌻குரு சொன்னார்:

"இந்த ரகசியம் தெரிந்த ஒருவனை நான் அறிவேன்...

அவனைச் சென்று பார்!"

🌻குரு சொன்ன அடையாளத்தின்படி...

அவன் ஒரு பைத்தியகாரன்.

சீடன் சொன்னான்:

அவனை எனக்குத் தெரியும்...
அவனை பற்றி நிறையவே கேள்விப்படிருக்கிறேன்...

அவன் எப்படி எனக்கு உதவ முடியும்?

🌻குரு சொன்னார்:

"நீ அவனிடம் செல். அவனை மிகவும் கவனமாக கவனி..."

சீடன் அந்த பைத்தியக்காரனைப் பார்க்கச் சென்றான்...

🌻சீடன் சென்றபோது...

ஒரு சிறுவன் மது ஊற்றிக் கொடுக்க...

அதை அந்தப் பைத்தியக்காரன் பருகிக் கொண்டிருந்தான்...

🌻இதைப் பார்த்த சீடனுக்கு...
அவன் மீது வெறுப்பு உண்டாயிற்று...

இருந்தாலும்...
குரு சொல்லியிருக்கிறார் என்பதால்...

சீடன் அவனிடம் கேட்டான்:

🌻"ஐயா ! தயவு செய்து நீங்கள் சொல்ல வேண்டும்...

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

🌻இதைக் கேட்ட பைத்தியக்காரன் சிரித்தவாறே கூறினான்...

"இந்த சிறுவன் என் மகன்...
இன்னும் சற்று அருகில் வந்து பார்!

நான் குடித்துக் கொண்டிருப்பது வெறும் தண்ணீர்தான் !

இந்த சிறுவன் ஊற்றித் தருவது மதுவல்ல!"

🌻சீடன் கேட்டான் :

"பிறகு எதற்கு மது அருந்துவது போல் பாசாங்கு செய்கிறீர்கள்?

நீங்கள் வைத்திருக்கும் கோப்பையும்...ஜாடியும்...

தண்ணீர் வைத்துக் கொள்வதற்கும்...

பருகுவதற்கும்...
ஆனது அல்லவே!

பிறகு ஏன் இவையெல்லாம்?

🌸பைத்தியக்காரன் மிக மெதுவாகக் கூறினான்:

"நான் இப்படி இருப்பதால்தான்...

ஒருவர் யாத்திரைக்குச் செல்லும்போது...

அவருடைய அழகான பெண்ணை...

என் பொறுப்பில்
விட்டுச் செல்வதில்லை...

அதற்கு இது ஒரு உபாயம்!"
என்று கூறிச் சிரித்தான்.

🌸நீயும் இடையூறுகளைத் தவிர்க்க...

இது போன்ற உபாயங்களை பயன்படுத்திக்கொள்.

🌿ஓஷோ🌿
☘ஓஷோவின் ஞானக்கதைகள்

Comments