மனிதன் தன் ஆணவத்திற்கு, தீனி போட்டுக் கொண்டே இருக்கிறான்...- OSHO
மனிதன் தன் ஆணவத்திற்கு, தீனி போட்டுக் கொண்டே இருக்கிறான்...
ஆனால்,
இவன் இல்லாமலேயே...
எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது...
🌸இவன் ஒன்றுமே இல்லை...
ஆனால், தானே எல்லாமாக நினைத்துக் கொள்கிறான்...
🌻முல்லா நஸ்ருதீன்,
ஒரு கிணற்றைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்...
உள்ளே எட்டிப் பார்க்கலாம்
என்று தோன்றியது...
அது இரவு நேரம்...
இருந்தாலும் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார்...
கிணற்று நீரில் நிலா தெரிந்தது...
🌻"ஐயோ, இந்த நிலாவைக்
காப்பாற்ற வேண்டுமே!"
என்ற எண்ணம் தோன்றியது அவருக்கு...
காப்பாற்றாவிட்டால் சந்திரன்
தேய்வது எப்படி?
தேயாவிட்டால் ரம்ஜான் நோன்பிருக்க எப்படி முடியும்?
🌻அவர் உடனே ஒரு கயிற்றைத் தேடிப்பிடித்துக் கிணற்றுக்குள் வீசினார்...
🌻"பிடித்துக்கொள், பலமாக!"
என்று கத்தினார்...
கயிறு எங்கோ, கீழே மாட்டிக் கொண்டது...
பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தார் அவர்...
முடியவில்லை.
கயிறு வரவில்லை...
🌻திடீரென்று கயிறு கழன்றது...
தடாலென மல்லாக்கத் தரையில் விழுந்தார் முல்லா...
மூச்சு வாங்கியது...
மேலே பார்த்தார்...
🌸வானத்தில் நிலவின் பவனி!
அவருக்கு ஒரே மகிழ்ச்சி...
"நான் வந்து காப்பாற்றியதால்
உயிர் பிழைத்தாய்!!
இல்லையா? என்றார் முல்லா மகிழ்ச்சியுடன்.
🌸"தன்னால்தான் எல்லாம் நடப்பதாக" மனிதன் நினைத்துக் கொள்கிறான்.
🌸"இவன் பிறக்கும் முன்பும்...
இந்த உலகம் இருந்தது...
இவன் இறந்த பிறகும்...
இந்த உலகம் இருக்கும் !!!"
#ஓஷோ
Comments
Post a Comment