Google

இங்கே இப்போது என்பதை எப்படி உணர்வது ? 💝

இங்கே இப்போது என்பதை  எப்படி உணர்வது ? 💝



நீங்கள் ஓர் ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ காதலித்தால் அப்பொழுது இங்கே  இப்பொழுதை நீங்கள் உணரவில்லையா ? அப்படி அதை உணராவிட்டால் , நீங்கள் உண்மையிலேயே காதலிக்கவில்லை என்று அர்த்தம். 

நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுது  , உங்களால் இறந்தகாலத்தை மறக்க முடியவில்லையா ? அந்த கணம் மறையவில்லையா? 

அப்பொழுது உங்களிடம் இறந்தகாலம் , சரித்திரம் மற்றும் சுயசரிதை என்று ஏதாவது குறுக்கிடுகிறாதா ?
அப்படியென்றால் உங்களுக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியவில்லை. நீங்கள் காதலிப்பது போல் நடிக்கிறீர்கள். நீங்கள் உண்மையாகக் காதலிக்கவில்லை. அல்லது காதலிக்கத் தெரியவில்லை !

நீங்கள் காதலிக்கும் பொழுது உங்கள் சுயசரிதை தானே மறைகிறது. அங்கு எந்த இறந்தகால  நிகழ்ச்சியும் இல்லை. 

அப்பொழுது நீங்கள் உங்கள் வயதை உணர்வது இல்லை.அந்த கணம் நீங்கள் புதுமையாக புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்கள்.அப்பொழுது நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். 

முதன் முதலில் பிறக்கிறீர்கள். அதாவது மறுபிறவி எடுக்கிறீர்கள்! காதல் என்பதே மறுபிறப்பு தான். அங்கே எந்த எதிர்கால எண்ணமும் கிடையாது. 

அப்பொழுது நாளை என்று ஏதும் உண்டா ? நீங்கள் ஒரு பெண்ணுடன் காதல் செய்யும் பொழுது ,நாளை என்பதை உங்களால் உணர முடியுமா?

நாளைக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை சிந்திக்க முடியுமா?அப்படியென்றால் நீங்கள் காதலில் இல்லை என்று அர்த்தம். 

எப்பொழுது எல்லா எண்ணங்களும்  நிற்கிறதோ - அங்குதான் காதலின் இன்பம் உதயமாகிறது.

காதலில் சமாதி நிலையை அடைய முடியும் என்பது ஓர் உற்சாக அனுபவம்தான்.  

காதலில் காலம் நின்று விடுகிறது, மனம் நின்று விடுகிறது.  மற்றும் எண்ணங்களும் செயல்படுவதில்லை. எண்ணங்கள் செயல்படாத நிலையில் , காலம் நிற்கிறது.

 காலம் நின்ற பிறகு ஒரு பேரானந்தம் ,ஒரு மகிழ்ச்சி தானே எழும்புகிறது .

-- ஓஷோ --

Comments