Google

தியானப் பாதையில் பயணிப்பவர்களுக்கு...- OSHO

தியானப் பாதையில்
பயணிப்பவர்களுக்கு...
ஓஷோ...



🌸 எதிர்படும் பணியைச் செய்.

அகத் தூண்டுதலின்படி செயல்படு...

இயல்பாக வாழ்க்கை நடத்து...

🌸 வாழ்க்கையைக் குறித்துப் பெரிதான அல்லது தொலைவான திட்டங்கள் வேண்டாம்....

எதையும் வலுக்கட்டாயமாக
வாழ்க்கையின் மீது திணிக்க வேண்டாம்...

🌸 'இது கடமை - இது கடமையில்லை என எதையும் முன் கூட்டியே முடிவு செய்ய வேண்டாம்...

சுதந்திரமாக இரு.

🌸 அந்தந்த நேரத்து வேலையைச்
செய்து முடி...

அதை சாதனையாக நினைத்துத் தேங்கமால்,

மறந்துவிடு!

🌸 தொடர்ந்து நடைபோடு...

கடந்தகாலச் சுமைகளைத்
தாங்கியபடி திரியாதே...

"நிகழ்காலத்தில் கவனம் செலுத்து !!"

🌿ஓஷோ🌿
☘ அஷ்டவக்ர மகாகீதை. ch#59

Comments