மனித ஆற்றலை உருவாக்கும் திறன் - OSHO
⚡ மனிதனுக்கு சக்தியை, அளவற்ற ஆற்றலை,
மாபெரும் சக்தியை உருவாக்கும் திறன் உள்ளது
மனிதன் பார்க்கும் போது தெரியும் அளவு மிகச் சிறியவன் அல்ல
கண்ணுக்கே தெரியாத அளவு மிகச் சிறியதாக இருக்கும் அணுவால்
அளவற்ற சக்தியை வெளிப்படுத்த முடியும்
இந்த சிறிய அணு வெடிக்கும்போது
அதீத சக்தியை வெளிப்படுத்துகிறது எனும்போது
மனிதனின் தன்னுணர்வைப்பற்றி என்ன சொல்வது
மனிதனின் தன்னுணர்வும் வெடித்து அதீத ஆற்றலை வெளிப்படுத்தும்
நானும் சாதாரண மனிதனாக இருந்தவன்தான்
திடீரென இந்த வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தது
உன்னுடைய வெடித்து வெளிப்படலின் மையத்திற்கு நீ வரும்போது
நீ உன்னுடைய ஞானமடைதலின் அருகே நெருங்குகிறாய்
என்றாவது ஒருநாள்
உன்னுள் அணு வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தே தீரும்
ஒளி வெளிப்பாட்டை, ஒரு பிரகாசத்தை நீ அறியும்போது
நீயும் ஒரு புத்தன்தான்
எண்ணற்ற காலம் படைப்பில் முழ்கி இருப்பது – இதுதான் வெடித்து வெளிப்படல் ⚡
🔥 ஓஷோ 🔥
Comments
Post a Comment