Google

எண்ண மேகங்கள் - OSHO

எண்ண மேகங்கள் - OSHO


உங்கள் மனம் எண்ணங்கள் என்ற மேகங்களால் சூழப் பட்டுள்ளது ..மேகங்களின் பின்னே மறைந்து உள்ள ஆகாயம் என்ற மிகப் பெரிய உள்ளுணர்வை உங்களால் பார்க்க முடியவில்லை ..

நீங்கள் மேகத்துடன் ஒன்றிப் போய் விடுகிறீர்கள் ..மேகங்கள் உண்மையல்ல..
அவை கடந்து செல்லக் கூடியவை ..ஆகாயம் தான் உண்மையானது நிலையானது ..உங்கள் பார்வை மேகத்தில் இருந்து ஆகாயத்திற்கு மாற வேண்டும்..

உங்கள் உள்ளுணர்வு ஆகாயம் போன்று மிகப் பெரியது ..அதில் மிதந்து கொண்டு இருக்கும் எண்ணங்கள் என்ற சிறிய புள்ளிகளையே நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்..

உங்கள் பார்வை ஒரு வெள்ளைத் தாளில் உள்ள
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஒரு கறுப்புப் புள்ளியில் இருக்கும் பொழுது 
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
வெள்ளைத் தாள் மறைந்து விடுகிறது ..
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஆனால் உங்கள் பார்வை வெள்ளைத் தாளில் 
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இருக்கும் போது கறுப்புப் புள்ளி மறைந்து விடும் 
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

நீங்கள் உங்கள் உள்ளுணர் வையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது எண்ணங்கள் மறைந்து விடுகின்றன ..ஆகாயம் தான் உண்மை..அலைந்து கொண்டு இருக்கும் மேகங்கள் உண்மையல்ல..

எது எப்பொழதும் நிலையாக இருக்கிறதோ அதுதான் உண்மை என்று உபநிஷதங்கள் கூறுகின்றன ..ஆகவே உங்கள் உள்ளிருக்கும் 
நிலையான அழிவில்லாததை கண்டு கொள்ளுங்கள் ..

ஓஷோ ..
ஞானத்திற்கு 

Comments