Google

உலகத்தைத் துறந்துதான் ஞானம் அடைய வேண்டுமா....❓

கேள்வி : - ஓஷோ  உலகத்தைத் துறந்துதான் ஞானம் அடைய வேண்டுமா....❓





கேள்வி : - ஓஷோ  உலகத்தைத் துறந்துதான் ஞானம் அடைய வேண்டுமா....❓


❗ பதில்‬ : - " நான் இந்த உலகத்தைத் துறத்தலுக்கு மாறுபட்டிருக்கிறேன்

புத்தர், 'இந்த உலகத்தைத் துறக்க வேண்டாம்

மாறாக

இந்த உலகத்தின்மேல் உள்ள ஆசையைத் துறந்துவிடுங்கள்' என்றார்

அதையேதான் நானும் கூறுகிறேன்

நீங்கள் இந்த உலகத்தில் எவ்வளவு முழுமையாக இருக்க முடியுமோ

அவ்வளவு முழுமையாக இருங்கள் 

நீங்கள் அவ்வப்பொழுது தியானத்தன்மையிலிருந்து விடுமுறையில் செல்லுங்கள்  பரவாயில்லை

காலையில் எழுந்ததும்

ஒரு சில கணம் எல்லாவற்றையும் துறந்துவிடுங்கள் 

எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்

அப்பொழுது வெறுமனே உங்கள் ஆத்மாவோடு இருந்துவிடுங்கள்

அந்த விடிந்தும் விடியாத நிலையில் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கும்பொழுது

உங்கள் படுக்கையில் உட்கார்ந்து உங்கள் உயிர்த்தன்மையோடு ஒன்றியிருங்கள்

இது உங்களுக்கு மிகுந்த வெற்றியைக் கொடுக்கும் 

அந்தப் பழைய அறிவிப்புகள் கிட்டத்தட்ட வன்முறையைப் போலத்தான்

ஆனால்

அதை யாரும் எதிர்பார்க்கவில்லை 

ஏனெனில்

யாரும் தன்னை எதிர்ப்பதை அவர்கள் விரும்பவில்லை 

ஆனால்

நான் ஏற்கெனவே பல எதிர்ப்புகளைச் சந்தித்ததால்

அதைப்பற்றி கவலைப்படவில்லை 

கணவர் உயிரோடு இருக்கும்பொழுதே

பல லட்சம் பெண்கள் விதவையாக இருப்பதற்கு 

அந்த பழைய மதங்களே காரணம்

அதைப்போல பல லட்சம் குழந்தைகள் அனாதையாகத் திரிந்ததற்கும் அவையே காரணம்

பல தாய், தகப்பனார்கள் பிச்சை எடுத்ததற்கும் அந்த மதங்களே பொறுப்பேற்க வேண்டும்

'இந்த உலகத்தைத் துறக்கவும் ' என்று சொன்னது

எவ்வளவு தீங்கு செய்தது என்பதை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை 

இந்த உலகத்தைத் துறந்து சென்ற பெரும்பாலோர்

தங்கள் மனதளவில் இந்த உலகத்தில்தான் இருக்கிறார்கள்

இதனால் என்ன பிரயோஜனம்...???

நீங்கள் இந்தக் கணத்தில் இங்கே இருங்கள்

இது போதுமானது

இதுவே புனிதமானது 

உங்களைச்சுற்றி இருப்பவை அனைத்தும் அப்படியே இருக்கட்டும்

அதை வெறுமனே ரசியுங்கள் 

அவற்றை வெறுமனே உபயோகித்துக் கொள்ளுங்கள்

ஆனால்

அதை என்னுடையவை , எனக்கே சொந்தம் என்று கருதாதீர்கள்

இது போதும் ❗

Comments