Google

ஒம் தியானம் - OSHO

ஒம் தியானம் 



ஒரு நாற்காலி அல்லது தரையில் அமருங்கள்.

 உங்கள் முதுகுத்தண்டுநேராக, ஆனால் விரைப்பாக இல்லாமல்!

 மெதுவாக,ஆழமாக மூச்சை உள்ளே இழுங்கள்.  

அவசரப்படாதீர்கள்.

மெதுவாக உள்ளே இழுத்துக் கொண்டேயிருங்கள்.

முதலில் வயிற்றின் மேல்புறம் மேலெழும்,மூச்சை தொடர்ந்து உள்ளிழுத்துக் கொண்டேயிருங்கள்.

 பிறகு மார்பில் காற்று நிறையும்,

 இறுதியாக உங்கள் உடலில் கழுத்து வரைக்கும் காற்று நிரம்பியிருப்பதைஉணர்வீர்கள்.  

பிறகு ஒன்று அல்லது இரண்டு நொடி அந்த மூச்சை அப்படியே உள்ளேவைத்திருங்கள்.

 சிரமமில்லாமல் எவ்வளவுநேரம் முடியுமோ அத்தனைநேரம் வைத்திருங்கள். 

பிறகு மூச்சை வெளியேவிடுங்கள்.  வெளியேவிடுவதும்மெதுவாக செய்ய வேண்டும், உடலில் காற்று குறைந்து கொண்டே வரும், 

வயிற்றின் கீழ்புறம்வரை முழுவதும் காலியானதும், உள்ளேஇழுத்துக்கொள்ளுங்கள்.

 இப்போது எல்லாகாற்றும் வெளியேறும்.

 இதேபோல் ஏழுமுறை செய்யவேண்டும்.

பிறகு மெளனமாக உட்கார்ந்துதொடர்ந்து `ஓம்..ஓம்.. ஓம்’ என்றுசொல்லுங்கள். 

`ஓம்’ என்பதை திருப்பித்திருப்பி சொல்லும்போது,உங்கள் கவனம் முழுவதும் உங்கள் இரண்டு புருவங்களுக்குநடுவேநெற்றிப்பொட்டில் இருக்கவேண்டும்.  

இப்போதுசுவாசத்தை மறந்துவிடுங்கள்.

 திருப்பிதிருப்பி `ஓம்..ஓம்.. ஓம்” என்று சொல்லுங்கள். ஒரு மயக்கநிலையில், குழந்தையை தூங்கச்செய்ய தாய்பாடும் தாலாட்டைப்போல சொல்லவேண்டும்.

 வாய் மூடியேயிருக்கவேண்டும். அப்போதுதான்உங்கள் நாக்கு உங்கள் வாயின் மேல்புறத்தை தொடும், உங்கள் முழுகவனமும் நடுநெற்றிப்பொட்டில்,அதாவது மூன்றாவது கண்மீது இருக்கவேண்டும்.

இதை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு செய்யவேண்டும்.

 உங்கள் தலை முழுவதும்தளர்வதைபோல உணர்வீர்கள்.

 அப்படி தளரத்துவங்கும்போது உள்ளே ஒரு இறுக்கம் மறைவதை,ஒரு பதட்டம் காணாமல் போவதை நீங்கள் உணர்வீர்கள்.

பிறகு உங்கள் கவனத்தை உங்கள்தொண்டைக்கு கொண்டு வாருங்கள். 

பிறகு உங்கள் கவனம் தொண்டையில் இருக்கும் படியே மீண்டும் `ஓம்’ என்று பலமுறை சொல்லியபடி இருங்கள். 

பிறகு உங்கள் தோள்கள்,உங்கள் தொண்டை உங்கள் முகம் எல்லாமே தளர்வதை உணர்வீர்கள்,ஒருசுமை குறைந்ததைப் போல, ஒருபாரம் இறங்கியதைப் போல,நீங்கள் எடையற்று இருப்பீர்கள்.

இன்னும் ஆழமாக மூச்சை விடுங்கள், உங்கள் கவனத்தை உங்கள்தொப்புளுக்கு கொண்டு வாருங்கள். 

பிறகு அந்த `ஓம்… என்பதை தொடருங்கள். நீங்கள் இன்னும் ஆழமாக, ஆழமாக, ஆழமாக போகிறீர்கள். 

பிறகு நீங்கள் உங்கள் பாலுணர்வு மையத்திற்கு வருவீர்கள்.  

இது ஒருபத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பிடிக்கும். 

அதனால் மெதுவாக செய்யுங்கள், அவசரம் வேண்டாம்.

நீங்கள் உங்கள் பாலுணர்வுமையத்தை அடைந்தவுடன், உங்கள்முழஉடலுமே தளர்ந்திருக்கும். 

உங்களைச் சுற்றி ஒருவெளிச்சம், ஒரு வட்டம்,அல்லது ஒரு ஒளி சூழ்வதை உணர்வீர்கள்.

இப்போது நீங்கள் முழுசக்தியுடன் இருப்பீர்கள்,ஆனால் அந்த சக்தி அதிர்வலைகளற்ற நீர்த்தேக்கமாக இருக்கும்.

அதே நிலையில் நீங்கள் விரும்புவரையில் இருக்கலாம்.

தியானம் முடிந்தது.

இப்போது நீங்கள் அதை ரசிக்கிறீர்கள். 

 அந்த`ஒம்’ என்பதை நிறுத்துங்கள்.

 சும்மா உட்கார்ந்து கொண்டிருங்கள்.

 சாய்ந்து கொள்ளலாம் என்று தோன்றும், ஆனால் நீங்கள் உங்கள்நிலையை மாற்றினால், அந்த சக்திநிலை விரைவில் காணாமல் போகும், அதனால் கொஞ்சம் உட்கார்ந்துரசியுங்கள்.

ஏதோ ஒரு காரணத்தினால்,உங்கள் முழுஉடலும் பதட்டமாக இருக்கும்போது,இதை செய்யுங்கள், அது உங்களுக்கு ஒரு முழுமையான ஒய்வைக் கொடுக்கும்.

#ஓஷோ

Comments