Google

தந்த்ரா சூத்திரம்

#தந்த்ரா சூத்திரம்



*********
அன்பின் அணைப்பில் இருக்கும்போது

இனிமையான இளவரசியே!!

அணைப்பில், அந்த அழிவற்ற வாழ்விலு நுழைவாயாக
**************

#ஓஷோ விளக்கம்

"ஒரு கதை நினைவிற்கு வருகிறது.

மீரா, கிருஷ்ணனிடம் அன்பு கொண்டிருக்கிறாள்

அவள் ஒரு  இளவரசனின் மனைவி

அந்த இளவரசன், கிருஷ்ணனின் மீது பொறாமை கொண்டான்

கிருஷ்ணன் அங்கு இல்லை

கிருஷ்ணன் தேக உடம்பில் இல்லை

கிருஷ்ணன் தேக உடம்பில் வாழ்ந்ததற்கும்

மீரா தேக உடம்பில் வாழ்ந்ததற்கும் இடையே ஐயாயிரம் ஆண்டுகள் இடைவெளி இருந்தன

எனவே உண்மையில் எப்படிக்கிருஷ்ணனை மீரா நேசிக்க முடியும்?

கால இடைவெளி மிகவும் பெரியது.

ஒரு நாள் இளவரசனன் (மீரா கணவன்)

மீராவிடம் கேட்டான்

நீ உனது நேசத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறாய்

நீ கிருஷ்ணனைச் சுற்றி ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும்இருக்கிறாய்

ஆனால், கிருஷ்ணன் எங்கேஇருக்கிறான்?

நீ யாருடன் இவ்வளவு நேசமாக இருக்கிறாய்?

நீ யாருடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறாய்?"

மீரா கிருஷ்ணனுடன்...பேசிக் கொண்டும்,ஆடிக் கொண்டும்,பாடிக் கொண்டும்,சிரித்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருப்பாள்

அவள் பைத்தியம் போலத்தெரிந்தாள்

அவள் அப்படித்தான்,நம் கண்களுக்கு.

இளவரசன் கேட்டான்..."உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?

உன்னுடைய கிருஷ்ணன் எங்கே?நீ யாரை நேசிக்கிறாய்?நீ யாருடன் உரையாடிக் கொண்டிருக்கிறாய்?

நான் இங்கிருக்கிறேன்...ஆனால், நீ என்னை முற்றிலுமாக மறந்துவிட்டாய்.

மீரா சொன்னாள்..."கிருஷ்ணன் இங்கு இருக்கிறான் -- நீ இங்கு இல்லை

"ஏனென்றால், கிருஷ்ணன்என்றும் இருப்பவன்;

நீங்கள் அப்படியல்ல.

இன்றிருப்பீர்கள் நாளை இருக்க மாட்டீர்கள்

நீங்கள் இங்கு இருப்பதை எப்படி நான் நம்புவது?

எப்படி இரண்டு வாழாமைக்கு நடுவில்

ஒரு வாழ்வு இருக்க முடியும்?

இளவரசன் காலத்தில் இருக்கிறான்

ஆனால், கிருஷ்ணன் சாசுவதத்தில், என்றுமிருப்பதில் இருக்கிறான்

மீரா, இளவரசனின் அருகில் இருக்கலாம்

ஆனால், தூரத்தை ஒழித்து விடமுடியாது

அவன் தூரத்திலேயே இருப்பான்

"நீ கிருஷ்ணனை விட்டுக் காலத்தில்...மிக மிக அதிகமான தூரத்தில்இருக்கலாம்...

ஆனாலும் அருகிலிருக்க முடியும்...

"அது ஒரு மாறுபட்ட பரிமாணம்.

நான் என் முன்னே பார்க்கிறேன்,அங்கு ஒரு சுவர் இருக்கிறது;

நான் எனது கண்களை நகர்த்துகிறேன்,அங்கு வானம் இருக்கிறது...

நீ காலத்தினூடே பார்க்கும் போது, அங்கு எப்பொழுதும் சுவரே இருக்கும்..

.நீ காலத்தைக் கடந்து பார்க்கும்போது...அங்கு திறந்த வானம் இருக்கிறது...

எல்லையற்றது இருக்கிறது...

அன்பு எல்லையற்றதை...பிரபஞ்ச இருப்பில்...என்றும் இருப்பதை திறக்கிறது.

உண்மையில் நீ எப்போதாவது நேசித்திருந்தால்...அன்பை தியானத்திற்க்கான ஒரு யுக்தியாகப் பயன்படுத்தமுடியும்.

இதுதான் யுக்தி:"அன்பில் இருக்கும்பொழுது,இனிமையான இளவரசியே...அன்பில், அந்த அழிவற்ற வாழ்வாயிருப்பதில், நுழைவாயாக.

"சிவா சொல்கிறார்...அன்பு செய்தலாக மாறு...நீ அணைப்பில் இருக்கும் பொழுது...அணைப்பாகவே மாறு...முத்தமாகவே மாறு...

"நான் இல்லை, இருப்பது வெறும் அன்பே" என்று நீ சொல்லும்படியாக...முழுமையாக உன்னை மற.

பிறகு இதயம் துடிப்பதில்லை...அன்பே துடித்துக் கொண்டிருக்கிறது...

இரத்தம் ஓடிக் கொண்டிருக்கவில்லை...அன்பே ஓடிக் கொண்டிருக்கிறது...

கண்கள் பார்ப்பதில்லை...அன்பே பார்த்துக் கொண்டிருக்கிறது...

தொடுவதற்குக் கைகள் நகர்வதில்லை...அன்பே தொடுவதற்காக நகர்கிறது...

"அன்பாக மாறு...'என்றும் இருக்கும் வாழ்க்கைக்குள் நுழை...'அன்பு திடீரென உனது பரிமாணத்தை மாற்றுகிறது.

நீ காலத்திலிருந்து தூக்கி வீசியெறியப்படுகிறாய்..

."அன்பு ஆழமான தியானமாக மாறமுடியும்.

Source: விஞ்ஞான் பைரவ் தந்த்ரா

#ஓஷோ

Comments