Google

சும்மா கவனிப்பது எப்படி ஞானமாகும்?




🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

சும்மா கவனிப்பது எப்படி ஞானமாகும்?
.
இந்தக் கேள்வி ஓஷோவிடம் கேட்கப்பட்டது. ஏனெனில் அவரிடம்  எந்தப் பிரச்னையைக் கொண்டு சென்றாலும் எடுத்தவுடனேயே, “கொஞ்ச நேரம் சும்மா இரு...”  என்பார்.

ஒரு நாள் அதற்குப் பதிலாக புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு கதையைச் சொன்னார் ஓஷோ.

புத்தரும், அவரது சீடர் ஆனந்தாவும் ஒரு காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட தூரம் நடந்ததால் புத்தருக்கு தாகம் எடுக்கிறது. ஆனந்தா, தண்ணீர் தேடி அலைகிறார்.

ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார்.யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி, குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார்.“எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும்...” என்று குழந்தை மாதிரி புத்தர் அடம் பிடித்தார்.

ஆனந்தாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கொஞ்சம் கோபத்துடனேயே மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார்.நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார்.

குட்டைத் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளியும் அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் வெளேரென்று தெளிந்தது. இதைக் கண்டுகொண்டிருந்த ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது.

குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர், அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார்.“மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும்.

என் மனதைத் தெளியவைக்கும் சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்!” என்றார்.

புத்தர் புன்னகைத்தார்.

இந்தக் கதையை ஓஷோ சொல்லிவிட்டு

"எந்தவொரு பிரச்சனை,துன்பம், கோபம் மனதை அலைக்கழித்தாலும், குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல, 

 மனதில் உள்ள பிரச்சனை , துன்பம், சோகம், கவலை தெளிவடைய சும்மா கவனித்திருங்கள்.

மனதில் வந்த பிரச்சனை , துன்பம், சோகம், கவலை  அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிலை உண்டாகும்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

Comments