Google

சிரிப்பு பிரார்த்தனையை விட அதிக புனிதமானது - OSHO



சிரிப்பு பிரார்த்தனையை விட அதிக புனிதமானது.

ஏனெனில் பிரார்த்தனையை எந்த மடையன் வேண்டுமானாலும் செய்யலாம்.

அதற்கு புத்திசாலித்தனம் தேவை இல்லை.

சிரிப்புக்கு புத்திசாலித்தனம் தேவை.

அதற்கு விஷயங்களை விரைவாக பார்க்கும் அறிவு வேண்டும், அந்த வினாடியில் அங்கிருக்கும் மனம் வேண்டும்.

ஒரு ஜோக்கை விவரிக்க இயலாது.

நீ அதை புரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிடில் நீ அதை தவற விட்டு விடுவாய்.

அதை விவரித்து கூறினால் அது அதன் முழு அழகையும் இழந்து விடும். எனவே ஜோக்கை விவரிக்க முடியாது.

நீ அதை உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும்.

உன்னால் அதை உடனடியாக புரிந்து கொள்ள முடியா விட்டால் நீ அதை முயற்சி செய்து புரிந்து கொள்ளலாம், ஆனால் உன்னால் அப்போது அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியும், அப்போது ஜோக் அங்கிருக்காது.

அது அந்த வினாடியில்தான் இருக்கிறது. நகைச்சுவைக்கு அங்கிருக்க வேண்டும், முழுமையாக அந்த வினாடியில் அங்கே இருக்க வேண்டும்.

அது பகுத்தாயும் விஷயமல்ல, அது உள்ளே உதிக்கும் விஷயம்.

உன்னால் முழுமையாக சிரிக்க முடியுமென்றால் அங்கே புரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

ஆழமான சிரிப்பில் அகம்பாவம் மறைந்து விடுகிறது. அது அங்கே காணப்படுவதில்லை.

அகம்பாவம், சிரிப்பு இரண்டையும் ஒன்றாக வைத்திருக்க முடியாது.

--#ஓஷோ--

Comments