போலித்தனங்களால் யோகமே செத்துப் போய்விட்டது - OSHO
செத்துப் போய்விட்டது...
உண்மையாக இருப்பதை யாரும்
போலியாக்க முடியாது...
🌸ஏனென்றால், உண்மையானது
இடைவிடா இயக்கம் கொண்டது...
அதற்குள் ஒருவர் எட்டிக் குதிக்கலாம்...
ஆனால், பயிற்சி செய்து பார்க்க முடியாது...
🌸எந்தப் பயிற்சியும் மனதால் நிகழ்வது...
மனதின் செயல்பாடு அது...
🌸மனமோ கடந்த காலத்தது...
செத்துப் போனது...
வெளியில் குதிக்க வேண்டியதெல்லாம் மனதிலிருந்துதான்...
🌸மனம் கடந்தால் பிரளயம்தான் !
அதனால், மனதின் தந்திரங்கள் பற்றிக்
கவனமாக இருங்கள் !
🌸மமியா என்பவர், தியானம்
கற்க குருவைத் தேடிப் போனார்...
"ஒரு கை ஓசை எப்படி இருக்கும்?" என்பதில்
கவனம் செலுத்துமாறு
அந்தக் குரு சொன்னார்...
🌸மமியா அங்கிருந்து சென்றுவிட்டு,
ஒரு வாரம் கழித்து திரும்பி வந்தார்...
தலையை ஆட்டியபடியே...
அவரால் முடியவில்லை...
🌸"ஓடிப்போ !
நீ கடுமையாக முயலவே இல்லை...
இன்னும் நீ,
பணம், உணவு,மகிழ்ச்சி என்றுதான்
சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்...
நீ செத்துத் தொலைவதே மேல்.
அப்புறம்தான், உனக்கு விடை கிடைக்கும் போலிருக்கிறது!" என்றார் குரு...
🌸மமியா உடனே வெளியேறிவிட்டார்...
அடுத்த வாரம் திரும்பி வந்தார்...
"ஒரு கை ஓசை எது?" என்றார் குரு...
மமியா, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு,
முனகிச் செத்தவர்போல் தரையில் விழுந்தார்...
🌸"சரி, நீ என் ஆலோசனையை
ஏற்றுச் செத்துவிட்டாய்...
இது சரிதான்; ஆனால், அந்த ஒரு கை ஓசை விஷயம் என்ன?" என்று கேட்டார் குரு...
🌸மமியா, மெல்லக் கண் திறந்தார்;
"எனக்கு விடை கிடைக்கவில்லை!" என்றார்...
"செத்தவன் பேசமாட்டான், எழுந்து ஓடு!"
என்று விரட்டினார் குரு!!
🌿ஓஷோ🌿
Comments
Post a Comment