வாக்குவாதத்திற்கும், உரையாடலுக்கும் என்ன வித்தியாசம்?
🍁 வாக்குவாதத்திற்கும்,
🌸 வாக்குவாதத்தில்...
அடுத்தவர் சொல்வதைக் கேட்க,
நீங்கள் தயாராய் இருப்பதில்லை...
🌸 ஒருவேளை நீங்கள் கவனித்தால் கூட,
அந்தக் கவனித்தலும்,
தவறாகவே இருக்கும்...
உண்மையாகவே,
நீங்கள் கவனிப்பதில்லை...
🌸 அடுத்த உங்களுடைய விவாதத்திற்கு,
உங்களைத் தயார் செய்து கொண்டிருப்பீர்கள்...
அடுத்தவர் பேசிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் முரண்பாட்டிற்கு தயாராகிறீர்கள்...
🌸 உங்கள் வாய்ப்புக்காக...
மறுபடி விவாதிப்பதற்காகக்
காத்திருக்கிறீர்கள்...
உங்களுக்குள் ஏற்கனவே,
ஒரு எதிர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளீர்கள்.
🌸 ஒரு கோட்பாட்டைக் கொண்டிருக்கிறீர்கள்.
🌸 "நீங்கள் தேடலில் இல்லை,
அறியாமையில் இல்லை...
வெகுளியாய் இல்லை..."
நீங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கிறீர்கள்...
🌸 சில கோட்பாடுகளை
எடுத்துச் சொல்கிறீர்கள்...
அவற்றை நிரூபிக்க முயல்கிறீர்கள்...
"வாக்குவாதம் செய்பவர்களால்...
உரையாடலில் ஈடுபட முடியாது."
🌸 அப்படிப்பட்டவர்களால்,
மோதிக் கொள்ளதான் முடியும்...
குழப்பம் வந்தவுடன்,
ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொள்கின்றனர்...
🌸 இந்த மாதிரியான விவாதத்தில்,
நீங்கள் நிரூபித்துவிட்டதாக நினைக்கலாம்...
ஆனால், எதுவுமே நிரூபிக்கப்படுவதில்லை...
🌸 நீங்கள் அடுத்தவரை அமைதியாக்கிவிடலாம்...
ஆனால்,
அவர்களை மாற்றிவிட முடியாது...
அவர்களை
சமாதானப்படுத்த முடியாது...
🌸 ஏனெனில்,
இது ஒரு போர்...
ஒரு நாகரீகமான போர்...
வார்த்தைகளைக் கொண்டு
சண்டையிடும் போர்.
*🌿ஓஷோ🌿*
Video :
Video :
Comments
Post a Comment