Google

சிலந்தியின் எட்டுக் கண்கள்...... - SUFI



சிலந்தியின் எட்டுக் கண்கள்......

வெட்டுக் கிளியின் பட்டுக் கண்கள்......

எறும்பின் கலவைக் கண்கள்......

பூனையின் சலவைக் கண்கள்......

ஆந்தையின் பெரிய கண்கள்....

யானையின் சிறிய கண்கள்.....

இவற்றினும் மனிதக் கண்கள்.....

எப்போது புனிதக் கண்கள்......???

அகப்பார்வை இல்லாத ஆயிரம் கண்களை விடவும்

அகப்பார்வை கொண்ட ஒற்றைக் கண் மேலானது”

என்றார் சூஃபி

Comments