Google

கடவுள் உண்மையிலே இருக்கிறாரா...???* - OSHO



கடவுள் உண்மையிலே இருக்கிறாரா...???*

தயவுசெய்து விளக்கமாகக் கூறவும்...???

பதில் :
"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி அலுத்துப் போய்விட்டது..!

*மின்சாரம் என்றால் என்ன,

*உயிர் என்றால் என்ன,

*மறுபிறப்பு எப்படி ஏற்படுகிறது,

*இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது,

- என்பதற்கு யாராவது
"இதுதான்" - என்று முடிவாக நிரூபிக்க முடிந்தால், கடவுள் உண்டா, இல்லையா என்பதையும் நிரூபிக்க முடியும்..!

மேற்சொல்லியவற்றை சற்று ஆழ்ந்து பாருங்கள்..!

எல்லாமே இயக்கம்தான்..! _(Process)

எதுவுமே ஒரு பொருளாகக்
(Object) கிடையாது.

ஆகவே,
கடவுள் என்பதும் ஒரு இயக்கம் தான்..!

அது உயிரற்ற பொருள்களில்,
( Inanimate Objects )
உறக்கமாக இருக்கிறது.

உயிர்ப் பொருள்களில்,
( Animate Objects )
உயிராக - பிரக்ஞையாக -
உணர்வாக - சக்தியாக -
இருக்கிறது..!_

இயக்கம் என்று வரும் பொழுது,
மேடு, பள்ளம்;
இன்பம், துன்பம்;
பகல், இருட்டு;
ஆண் - பெண்
- என்று மாறுபட்டு இயங்குகிறது.

அப்பொழுது தான் அது ஒரு இயக்கமாக இருக்க முடியும்.

ஆகவேதான்,
"உங்கள் உள்ளே உள்ள உயிர்த்தன்மையை வணங்குங்கள்"
- என்று கூறுகிறேன்.

கடவுள் உங்களுக்குள்ளே - உங்களோடு, மிக நெருக்கமாக இருக்கிறார்.

அதை நீங்கள் வெளியே தேடுவது முட்டாள் தனமில்லையா....???

ஆகவே,
கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம், ஒரு செயலோடு , அது சம்பந்தப்படும் பொழுது தான் தெரியும்..!

மின்சாரம் இருப்பதற்கு ஆதாரம், அது செயல்வடிவம் பெறும் பொழுது தான் விளங்கும்.
eg -
டிவி, ரேடியோ, மோட்டார் ஓடுதல் .....

கடவுள் உங்களிடம் உணர்வாக (Consciousness) இருக்கிறார்.

ஹெய்சென்பெர்க் (Heisenbergh) என்ற ஒரு ஜெர்மன் விஞ்ஞானியின்,
'நிலையாமைத் தத்துவம்'
( Unerfainity Principle )
- பற்றி உங்களுக்குத் தெரியுமா...???

அவர் கூறுவது:
அணுவில் உள்ள மூலக்கூறுகள்,

"ஒரு சமயம்
பொருளாகவும்,

மறுசமயம்,
அலையாகவும்

இன்னொரு சமயம்,
பொருளாகவும்
அலையாகவும்

மறுசமயம்,
எதுவுமே இல்லாமலும்
( Nothing ! ) இருக்கிறது"
என்று கூறுகிறார் .

இதுவே கடவுள் தத்துவத்திற்கும் பொருந்தும் !

கடவுள் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கிறார்..!

அதனால் தான் மனிதன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறான்

இதில் புத்தர் அந்த ஒன்றுமற்ற தன்மையை (The Great Nothing) வற்புறுத்துகிறார்..

மதங்கள் பொருள்களை வலியுறுத்துகின்றன..

இவர்கள்தான்,
நீங்கள் நம்பும் ஆத்திகர்கள்..!

யோகிகளும், ஞானிகளும் அலையை ( Waves ) வற்புறுத்துகிறார்கள்..

நாத்திகன்,
அலையையும் - பொருளையும் பார்த்துப் புரியாமல் தவிக்கிறான்..!

இதை ஆழ்ந்து புரிந்து கொண்ட ஒருவன் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, தன் வாழ்நாளை வீண்டிக்க மாட்டான்..!

மனிதன்,
இந்த உலகத்தில்
படைக்கப்பட்டதே,
ஒருவருக்கொருவர் அன்பும்,
கருணையும் - கொண்டு,
உதவி செய்துகொண்டு,
ஆனந்தமாகச்
சிரித்து வாழவே..!

வேறு எதற்காகவும் இல்லை..!

பிறகு அவன் தன்னைத்தானே அறிந்துகொண்டு, ஞானத்தை அடைய வேண்டும்"..!


~ Osho ~

Comments