ஜோர்பா அவருடைய முதலாளியிடம் சொல்கிறார் - OSHO
ஜோர்பா அவருடைய முதலாளியிடம் சொல்கிறார்
முதலாளி, உங்களுக்கு எல்லாம் இருக்கிறது,
ஆனாலும் நீங்கள் வாழ்வைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்,
ஏனெனில் உங்களிடம் கொஞ்சம்கூட பைத்தியக்காரத்தனம் இல்லை.
கொஞ்சம் பைத்தியக்காரத்தனத்தை உங்களால் சமாளிக்க முடிந்தால்,
அப்போது உங்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியும்.
என்னால் ஜோர்பாவைப் புரிந்துகொள்ள முடிகிறது,
அவரை மட்டுமல்ல,
காலங்காலமாக இருந்த ஜோர்பாக்கள் எல்லோரையும்,
அவர்களின் கொஞ்சமான பைத்தியக்காரத்தனத்தோடு
ஆனால் எதிலுமே கொஞ்சம் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
ஒருவனால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு பைத்தியம்,
முழுமையான பயித்தியம் ஆகு என்பவன் நான்.
நீ கொஞ்சம் மட்டுமே பைத்தியம் என்றால்,
அப்போது வாழ்க்கையின் கொஞ்சத்தை மட்டுமே நீ புரிந்துகொள்கிறாய்.
இது எதுவுமே புரிந்துகொள்ளாமலிருப்பதைவிட மேல் என்று வேண்டுமானால் சொல்லலாம் <3
ஓஷோ
புரட்சிவிதை
ஓஷோ குழு
🌹🌹🌹🌹❤❤❤
Comments
Post a Comment