மருத்துவம் ஓஷோ
❤ *_மருத்துவம் ஓஷோ_* ❤
💚 பதஞ்சலியின் யோகா மனிதனுக்கு இருப்பது ஒரு உடல் அல்ல
அது ஐந்து படிவங்களாக அதாவது ஐந்து உடல்களாக இருப்பதாக சொல்கிறது
1. அன்னமய கோசம்
2. பிராணமய கோசம்
3. மனோமயக் கோசம்
4. விஞ்ஞானமயக் கோசம்
5. ஆனந்தமயக் கோசம்
இந்த ஐந்து உடல்களுக்கு பின்னால்தான் உங்கள் மெய்யிருப்பு இருக்கிறது
இந்த ஐந்து உடல்களையும் தனித்தனியாக ஐந்து வகையான மருத்துவங்கள் பார்க்கின்றன
1. அலோபதி
இது உங்கள் அன்னமய கோசத்தில் வேலை செய்கிறது
அதாவது அலோபதி வைத்தியம் மனித உடலை மட்டுமே நம்புகிறது
இதில் விஞ்ஞானக் கருவிகள்தான் உங்கள் உடலை பார்க்கின்றன
2. அக்கு பஞ்சர்
இது உங்கள் பிராணமயக் கோசத்தில் வேலை செய்கிறது
அதாவது அக்கு பஞ்சர் வைத்தியம் உயிரியல் சக்தியில் உயிரியற் பொருளில் வேலை செய்ய முயலுகிறது
அக்குபங்சர் உடலில் ஏதாவது கோளாறு என்றால் உடலைத் தொடவே தொடாது
அது உடலின் முக்கிய புள்ளிகளைத்தான் தொடும்
உடனே மொத்த உடலும் நன்றாக வேலை செய்யத் துவங்கி விடும்
உங்கள் மைய உடலில் ஏதாவது கோளாறு என்றால் அலோபதியால் குணப்படுத்த முடியாது
ஆனால் அக்குபஞ்சரால் அதை எளிமையாக குணப்படுத்த முடியும்
மைய உடல் என்பது உடலுக்குச் சற்று மேலானது
அந்த மைய உடலை சரி செய்து விட்டால்
உடல் தானாகவே அதை பின்பற்றும்
காரணம் உடலின் வரைபடம் மைய உடலில்தான் உள்ளது
மைய உடலின் செயல் வடிவம்தான் புற உடல்
ரஷ்யாவின் கிர்லான்
புகைப்படக்கருவி நமது உடலில் எழுநூறு மையப் புள்ளிகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது
புற வழியாக நமக்கு இந்த எழுநூறு மையப்புள்ளிகள் தெரிவதில்லை
நீங்கள் உங்கள் மையப்புள்ளிகளை சரி செய்வதன் மூலம் உடலின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம்
ஒரு அக்குபங்சர் மருத்துவருக்கு நோய் முக்கியமில்லை நோயாளிதான் முக்கியம்
காரணம் நோயாளிதான் நோயை உருவாக்கி இருக்கிறார்
3. ஹோமியோபதி
இது இன்னும் சற்று ஆழமாக சென்று மனோமயக் கோசத்தில் வேலை செய்கிறது
சிறிய அளவிலான மருந்து ஆழமாகப் போகும் மருந்தின் அளவைக் குறைத்துக் கொண்டே செல்லும்
இந்த முறைக்கு வீரியப்படுத்துதல் என்று பெயர்
அதிக வீரியம் இருக்கும் போது அதன் அளவு சிறியதாக இருக்கும்
அது மனோ மையத்தின் ஆழத்திற்கு செல்லும்
அது உங்கள் மன உடலுக்குள் செல்லும்
அங்கிருந்து வேலை செய்யத் துவங்கும்
பிராணமயத்தைவிட அதிகமாக வேலை செய்யும்
4. மனோவசிய சிகிச்சை (ஹிப்னாடிசம்)
இது விஞ்ஞான மயக் கோசத்தை தொட்டு வேலை செய்யும்
இது எதையும் எந்த மருந்தையும் பயன்படுத்தாது
இது யோசனையை மட்டுமே பயன்படுத்தும்
இது ஒரு யோசனையை உங்கள் உள் மனதில் விதைக்கும் உங்களை மனோவசியப் படுத்தும்
உங்களுக்கு எது பிடிக்குமோ அது சிந்தனை சக்தியால் வேலை செய்கிறது
இது அப்படியே சிந்தனை சக்திக்குள் குதிக்கிறது
விஞ்ஞானமய கோசம் உணர்வுகளின் உடல்
உங்கள் உணர்வுகள் ஒரு யோசனையை ஏற்றுக்கொண்டவுடன்
அது இயங்கத் துவங்குகிறது
மனோவசிய சிகிச்சை உங்களுக்கு ஒரு வகை உள் பார்வையைக் கொடுக்கும்
5. தியானம்
ஆனந்தமய கோசத்திற்கு தியானம்தான் சிகிச்சை வைத்தியம்
தியானம் உங்களுக்கு எந்த யோசனையையும் சொல்லாது
காரணம் யோசனை என்பது வெளியில் இருந்து வருவது
யோசனை என்றால் நீங்கள் யாரையாவது நம்பியிருக்க வேண்டும்
தியானம்தான் உங்களை சரியானபடி உணரச் செய்கிறது
தியானம் ஒரு தூய்மையான புரிந்து கொள்ளுதல் அது ஒரு சாட்சிபாவ நிலை
தியானத்தில் ஒருவர் ஆழ்ந்து உள்ளே சென்றால்
ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்
உலகத்தில் தியானம் வெற்றி பெற்றால்
பிறகு எந்த மதமும் தேவையில்லை
தியானத்தில் நீங்கள் இருத்தலோடு நேரடி தொடர்பில் இருப்பீர்கள்
தியானத்தின் உச்சமே புத்துணர்ச்சி
தியானம் முழுமை பெறும் போது உன்னுடைய இருத்தல் முழுவதிலுமே ஒளி வருகிறது
முழு பேரின்பம் பரவுகிறது
முழு பரவசம் உன்னை ஆட்கொள்கிறது 💚
Comments
Post a Comment