தம்ம பதம் - 3 (சின்ன மெழுகுவர்த்தி) - OSHO
தம்ம பதம் - 3 (சின்ன மெழுகுவர்த்தி)
பிரபலமான ஒரு கதை:
ஒரு நாள் இரவு சிறந்த ஒரு ஜேர்மனிய தத்துவ அறிஞ்ரான பேராசிரியர் வான் கோசென்பாக் இரண்டு கதவுகளைக் கனவில் கண்டார். ஒன்று நேராக அன்புக்கும் சொர்க்கத்துக்கும் போனது. இன்னொன்று அன்பைப் பற்றியும் சொர்க்கத்தைப் பற்றியும் ஒரு சொற்பொழிவு நடந்து கொண்டிருந்த ஓர் அரங்குக்குப் போனது. வான் கோசென்பாக் எந்தத் தயக்கமும் இல்லாமல் அந்தச் சொற்பொழிவைக் கேட்கப் போனார்.
முக்கியமான கதை. கற்பனைக் கதைதான் என்றாலும் அதில் அப்படி ஒன்றும் மிகையில்லை. மனித மனதைக் குறிக்கிறது. மனம் ஞானத்தை விட அறிவில் நாட்டம் அதிகம் கொண்டிருக்கிறது. நிலை மாற்றத்தை விடத் தகவலில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறது. கடவுள், அழகு, சத்தியம் இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதில் நாட்டம் கொண்டிருக்கிறதே அன்றி அனுபவிப்பதில் இல்லை.
வார்த்தைகள், கொள்கைகள், சிந்தனை முறைகள் மனதைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன. சுற்றியிருக்கும் இயற்கையைத் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றன. இருத்தல் விடுவிக்க முடியும். அதைப் பற்றிய அறிவு அல்ல.
-- ஓஷோ
Comments
Post a Comment