Google

இப்போது விஞ்ஞானிகள் கூட இதை ஒப்புக் கொள்கிறார்கள். - OSHO



இப்போது விஞ்ஞானிகள் கூட இதை ஒப்புக் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு மிருகத்தைக் கொள்ளும்போது, பயத்தில் அது எல்லாவிதமான விஷத்தையும் வெளியேற்றுகிறது.

மரணம் என்பது சுலபமல்ல. நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்லும்போது, பயத்தில் எல்லா விதமான பெரிய நடுக்கமும் உள்ளே எழுகிறது.

அந்த மிருகம் வாழ நினைக்கிறது. எல்லா விதமான விஷங்களும் வெளியேறுகிறது.

            நீங்கள் பயத்திலிருக்கும்போது கூட, நீங்களும் எல்லா விதமான விஷங்களையும் உடலிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்.

இந்த விஷங்கள் உதவுகின்றன. ஒன்று நீங்கள் சண்டைபோட அல்லது மண்டையைப் போட உதவுகின்றன.

 சில சமயங்களில் இது நடக்கும். நீங்கள் கோபத்தில் ஒரு காரியத்தை செய்வீர்கள்.

 அதை நீங்கள் செய்ய முடியும் என்று உங்களால் கூட கற்பனை செய்திருக்க முடியாது.

நீங்கள் ஒரு பாறையைக் கூட நகர்த்தியிருக்கலாம். அதை மற்ற நேரத்தில் உங்களால் அசைத்திருக்க முடியாது.

ஆனால் கோபம் இருந்திருக்கிறது. அதனால் அந்த விஷம் வெளியேறுகிறது.

பயத்தில், மக்கள் வேகமாக ஓடுவார்கள். அவர்களை ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயக்காரர்களால் கூட முந்த முடியாது.

 நீங்கள் யோசித்துப் பாருங்கள், உங்கள் பின்னால் ஒருவர் கத்தியோடு உங்களை குத்த வருகிறார்.

உங்களால் சிறப்பாக எதைச் செய்ய முடியுமோ அதைத் தான் செய்வீர்கள். உங்கள் முழு உடலுமே அதிக அளவில் செயல்பட முடுக்கிவிடப்படும்.

           நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்லும்போது அதில்  கோபமிருக்கிறது பயமிருக்கிறது.

அது மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த மிருகத்தின் எல்லா நாளங்களும் பல விதமான விஷத்தை வெளியேற்றுகின்றன.

அதனால் நவீன சிந்தனை என்னவென்றால் கொல்வதற்கு முன்பு அந்த மிருகத்தை மயக்கமடையச் செய், ஒரு மயக்க மருந்து கூட, நவீன கசாப்புக் கடைகளில் கூட பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், அது ஒரு பெரிய மாறுதலைத் தரப்போவதில்லை. அது ஒரு மேலோட்டமான மாற்றம்தான்.

காரணம் ஆழ்ந்த மையத்தில் எந்த மயக்க மருந்தும் எட்ட முடியாது, மரணத்தைச் சந்தித்துதான் ஆகவேண்டும்.

அது உணர்வோடு இருக்காது, என்ன நடக்கிறது என்பது அந்த மிருகத்திற்குத் தெரியாது.

ஆனால் ஏதோ நடக்கிறது கனவில். அது ஒரு கொடுங்கனவைக் கழித்துக் கொண்டிருக்கிறது.

 அந்த மாமிசத்தை சாப்பிடுவது கூட விஷமான உணவை சாப்பிடுவது போலத்தான்...

    ஓஷோ

Comments