எல்லாமே வெறுமையில் இருந்து வெளியே வருகிறது - OSHO
எல்லாமே வெறுமையில் இருந்து வெளியே வருகிறது.அதன்பின் மீண்டும் வெறுமைக்குள் திரும்பிப் போய்விடுகிறது.
ஆகவே எதன்மீதும் பற்றுதல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் பற்றுதல் துன்பத்தை கொண்டு வருகிறது.அது விரைவில் போய்விடும்.
காலையில் மலர்ந்த ஒரு மலர் மாலை நேரம் வந்தவுடன் விழுந்து விடும்.எனவே எதன்மீதும் பற்று கொள்ளாதீர்கள்.அப்படி அதன்மீது பற்று கொண்டால் மாலையில் அங்கு துன்பம் இருக்கும்.அதன்பின்னர் உங்கள் கண்களில் கண்ணீர் வரும்.அதன்பின்னர் அந்த மலர் இல்லாமல் வாடுவீர்கள்.
அந்த மலர் அங்கு இருக்கும்போது சந்தோஷமாக அனுபவியுங்கள்.ஆனால் அந்த மலர் வெறுமையில் இருந்துதான் வந்துள்ளது என்றும் மீண்டும் வெறுமைக்குள் திரும்பவும் போய்விடும் என்பதையும் ஞாபகத்தில் வைத்திருங்கள்.
இதே உண்மையானது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
மக்கள் குறித்தும்கூட இது பொருந்தும்.
❤ஓஷோ❤
Comments
Post a Comment