Google

கடவுள் ஒரு நபர் அல்ல - OSHO



கடவுள்

கடவுள் ஒரு நபர் அல்ல.

இது ஒரு தவறான புரிதல், நபர் என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு கிட்ட்த்தட்ட உணமையாக்கப் பட்டு விட்ட்து. பொய் கூட தொடர்ந்து நூற்றாண்டு காலமாக சொல்லப்படும் போது அது உண்மையாகவே தோற்றமளிக்கும்.

”கடவுள்” ஒரு இருப்பு. நபர் அல்ல.

எனவே எல்லா கடவுள்துதிகளும் முட்டாள்தனமானது. வேண்டுதல் அல்ல வழிபாட்டுத்தன்மையே அவசியம். வேண்டிக்கொள்வதற்கு அங்கு எவரும் இல்லை. உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே உரையாடல் நிகழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. உரையாடல் நிகழ்வதற்கு இரண்டு நபர்கள் தேவை. கடவுள் ஒரு நபர் அல்ல. ஒரு இருப்பு. அழகு இன்பம் இதைப்போல ஒரு இருப்பு.

எளிமையாக கடவுள் என்பது கடவுள்தன்மையே. இந்த காரணத்தினாலேயே புத்தர் கடவுள் இருப்பதை மறுத்தார். புத்தர் கடவுளை ஒரு தன்மையாக அனுபவமாக-அன்பை போல்- வலியுறுத்த விரும்பினார். அன்பிடம் நீங்கள் பேச முடியாது.அதில் வாழலாம். அன்பிற்கு நீங்கள் கோயில் கட்ட தேவையில்லை, அன்பிற்கு சிலை அமைக்க தேவையில்லை. சிலைகள் முன்பு குனிந்து வணங்குவது என்பது முட்டாள்தனமானது. மேலும் இதுதான் சர்ச்சுகளிலும் கோயில்களிலும் மசூதிகளிலும் நடக்கிறது.

கடவுள் ஒரு நபர் என்ற கருத்தில் மனிதன் வாழ ஆரம்பித்தான். பிறகு எல்லா பிரச்சனைகளும் சீரழிவுகளும் இதிலிருந்து ஆரம்பமானது.
மதத்தை சார்ந்தவன் என்று சொல்லக்கூடிய ஒருவன் கடவுள் என்பவர் எங்கேயோ வானத்தின் மேல் இருப்பதாக எண்ணிக் கொள்கிறான். அங்கிருக்கும் கடவுளை வணங்கி மகிழசெய்து தனக்கு சாதகமாக இருக்க வேண்டுகிறான். தன் ஆசைகளை நிறைவேற உதவவும், லட்சியங்கள் நிறைவேறவும் இவ்வுலகில் உள்ள செல்வங்களையும் மறுவுலகத்தில் உள்ள சொர்கத்தையும் வேண்டுகிறான்.

இது முட்டாள்தனமானது தேவையில்லாத நேர விரயம்.
இதற்கு மறுமுனையில் உள்ள மனிதர்கள் இதில் உள்ள அபத்தங்களை பார்த்து நாத்திகவாதி ஆகின்றான். அவர்கள் கடவுள் இருப்பையே மறுக்கிறார்கள். ஒருவகையில் அவர்கள் சரியே இன்னொருவகையில் அவர்களும் தவறு செய்கிறார்கள். அவர்கள் கடவுள் நபரையும் அவரது குணங்களையும் மறுக்க ஆரம்பித்து இறுதியில் கடவுள் அனுபவத்தையே மறுக்கிறார்கள்.
ஆத்திகவாதியும் தவறு நாத்திகவாதியும் தவறு. மனிதனுக்கு இந்த இரு சிறைகளில் இருந்து விடுதலை பெற புதிய பார்வை புதிய நோக்கு தேவை.

கடவுள் என்பது இறுதியான அமைதியின் அனுபவம். மேலான அழகின் ஆசிர்வதிப்பின் அனுபவம். அகத்தின் கொண்டாட்ட நிலை. கடவுள் என்பது கடவுள்தனமை என்று பார்க்க ஆரம்பித்துவிட்டால் பின் உங்கள் அணுகுமுறையில் பெரிய மாறுதல் ஏற்படும்.

அதன்பின் ”வேண்டுதலில்” எந்த மதிப்பில் இல்லை என்று ஆகிவிடும் தியானம் மட்டுமே செல்லுபடியாகும் என்று உணர்வீர்கள்.

--- ஓஷோ ---

Comments