❤ மனம் என்பது பொறுமையில்லாதது. - OSHO
❤ மனம் என்பது பொறுமையில்லாதது.
ஆனால் வாழ்க்கை பொறுமையானது.
மனம் என்பது பொறுமையில்லாதது.
ஆனால் இந்த இயற்கை பொறுமையானது.
மனம் என்பது தற்காலிகமானது.
வாழ்க்கை என்பது முடிவில்லாதது.
மனதிற்கு, எதிர்பார்க்க, ஆசைப்பட, உணர, சாதிக்க என்ற வரையறைகள் உண்டு.
ஆனால் வாழ்க்கைக்கு வரையறைகள் இல்லை.
அது போய்க்கொண்டே இருக்கும்.
அது முடிவில்லாத செயல்முறை.
எதிர்காலத்தில் நமது ஆசைகள் சில பூர்த்தியாக வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகள் நம்மிடம் இருப்பதால்
நமது மனம் தொடர்ந்து அதிருப்தியில் உள்ளது.
வாழ்க்கையின் எல்லையற்ற நிலையை,
அதன் எல்லைகளற்ற செயல்முறையை பார்க்கின்ற ஒருவர் திருப்தியுடன் இருப்பார்.
அது ஒரு பாதுகாப்பான எண்ணம் இல்லை
இது ஞானம் ❤
❣ *_ஓஷோ_*
Comments
Post a Comment