Google

தியானம் நம்மை விட்டு அகலாமல் நீடித்திருக்க அதற்கு நாம் செய்ய வேண்டிய செயல்கள்! - OSHO



தியானம் நம்மை விட்டு அகலாமல் நீடித்திருக்க அதற்கு நாம்  செய்ய வேண்டிய செயல்கள்!
        நன்றாகக் கழுவித் துடைத்த எழுத்துப் பலகையில் ( ஸ்லேட்டில் ) அழகிய ஓவியம் வரையலாம். அருமையான கவிதை எழுதலாம். கதை, கட்டுரைகள் கூட எழுதலாம். பலகையில்  அவை பளீரெனத் தெரிவதைப் போல நம் தியானத்தால் தூய்மடைந்திருக்கும் மனதில் நிறைய, நிறைய நல்லெண்ணங்களை விதைக்க வேண்டும்.
       மஹாத்மா காந்தி அவரது சுயசரிதையில் ஹரிச்சந்திரனின் கதை அறிந்தபின் அவரது வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றியும், மனம் சங்கடம் அடையும் சமயங்களில் மஹாபாரதம்  (ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டி) படித்து தெளிவடைந்ததாகவும் குறிப் பிட்டுள்ளார். அப்படி அதில் என்னதான் இருக்கிறது? என்று சிந்தித்த நாம் அதனை சற்றேனும் அறியத் துவங்கினால், அதில் என்னதான் இல்லை ? என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவோம்.
       வேதங்களையும், உபநிஷத்துகளையும், இதிகாசங்களையும், புராணங்களையும் எழுதி வைத்திருப்பது வாசித்து அறிவதற்காக மட்டுமல்ல. அவற்றை  அவசியம் நம் வாழ்விலும் பயன்படுத்தி நல்வழிப்பட  வேண்டும் என்கிற நல்ல நோக்கமும் ஒரு காரணம்.
          மூன்று முக்கிய குணங்களைப் (ஸத்வம, ரஜஸ், தமஸ்) பெற்றுள்ள ஒவ்வொரு மனிதனும் , தன்னிடம் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் குணத்தினால் தூண்டப் பட்டு அதன்படி செயல்படுகிறான். இந்த பிரம்மமும் இம்மூன்று குணங்களைத்தான் ஆதாரமாகச் சார்ந்திருக்கிறது. இதற்கு மாற்றுவழியை தேடுவதை (இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்காமல் அதன்  போக்கிலேயே)  விட்டு,  இயற்கைக்கு ஏற்ப நாம் மாறிக்  கொள்வது என்பது மிகவும் சுலபமாகும்.
        கதைகளில் ஒருவர் கதாநாயகனாகவும், மற்றொருவர் வில்லனாகவும், வேறு சிலர் இரண்டிற்கும் இடைப் பட்டவர்களாகவும் சித்தரிக்கப் படுவது இவ்வகை குணங்களில் காணப் படும்  அளவுகளிலுள்ள குறை பாடுகளேயாகும். ஆண்டவன் (பர ப்ரம்மம்) படைப்பில்  மாறுபாடுகள் எதுவுமின்றி எல்லோரையும் சமமாக ஒரேபோல நல்ல குணங்களுடன் படைத்துவிட்டு போக வேண்டியதுதானே? எதற்காக இத்தனை வேறுபாடுகள்? இந்த மாதிரியான தேடல்களுக்கான விளக்கங்களையும், விடைகளையும்  அளிக்கவென்றே ஏற்படுத்தப்  படுடுள்ள சான்றுகள்தான் மேலே குறிப்பிட்டுள்ள இதிகாச, புராண. சரித்திர, சாஸ்திர, சம்பிரதாய கிரந்தங்கள் அனைத்தும்.
      நமது தேடல்களுக்கான விடைகளைத் தாங்கியபடி போற்றப்படும் வேத நூல்களை அனைவரும் படித்தறிவது /கேட்டறிவது அவசியமாகும். தியானம் போற்றப் பட வேண்டுமென்றால் ஞானம்/ தெளிவும் அவசியம் தேவைப் படுகிறது.

Comments