எதனோடும் உன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளாதே!
எதனோடும் உன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளாதே!
எதுவாக இருந்தாலும் வரும்,போகும்.
ஆனால் நீ ஒரு பார்வையாளனாக, ஒட்டாமல், ஒன்றிவிடாமல், தள்ளி நின்று ஒரு சாட்சியாக. நின்று பார்த்துகொண்டே இருப்பாய்.
மனம் எதனோடு தன்னை ஒன்றுபடுத்திகொள்கிறதோ அதுவாகவே அது ஆகிவிடுகிறது.
பளிங்கு தன் அருகில் உள்ள எந்த நிறத்தையும் ஏற்றுகொள்கிறது.
நிறத்தின் தீவிரத்தால் தன்னை அறவே மறந்து தான் சார்ந்த பொருளுடன் தன்னை ஒன்றுபடுத்திகொள்கிறது.
பளிங்கின் அருகில் சிவப்பு மலர் இருந்தால் சிவப்பு நிறம் பெறுகிறது.
தன்னை மறந்து சிவப்பு என்றே எண்ணுகிறது.
நாமும் உடலின் இயல்பிலேயே ஒன்றி, நாம் யார் என்பதை மறந்துவிட்டோம்.
அழியக்கூடிய இந்த உடலிலிருந்தே எல்லா துயரங்களும் உண்டாகின்றன.
நமது கவலை, சஞ்சலம், தொந்தரவு, தவறு, பரவீனம், தீமை எல்லாம் "நாம் உடம்பே" என்று கருதும் ஒரு பெரும் தவறிலிருந்தே உண்டாகிறது.
தியானப் பயிற்சி தொடர்கிறது.
பளிங்கு, தான் யாரென உணர்கிறது; தன் சுய நிறத்தை மேற்கொள்கிறது.
Comments
Post a Comment