Google

கவனத்தோடு பார் , எதையும் கவனத்தோடு பார் - OSHO



கவனத்தோடு பார்

எதையும் கவனத்தோடு பார்

எதையும் தியானித்துப் பார்

தியானத்தோடு பார்க்கும் போது எதுவும் புரிகிறது

ஆழ்ந்து கவனிக்கும் போது அறிவு கிடைக்கும்

தியானத்தோடு கவனிக்கும் போது அறிவு கழியும்

கவனிப்பது என்பது தெரிந்து கொள்வதற்காக அல்ல

அது புரிந்து கொள்வதற்காக

இசையைக் கேட்பது போல்

பறவைகளின் ஒலியைக் கேட்பது போல்

சும்மா கேட்கிறாய் புரிந்து கொள்கிறாய்

எதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

அப்போது நீ மனம் கழிந்து போய் கேட்கிறாய்

அப்படி கேட்கும்போது பரவசமாகிப் போகிறாய்

சத்தியத்தை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

அறிவு சாதிப்பது ஒரு போராட்டம் இதுதான் டார்வின் சொன்ன
" survival of the fittest "

குழந்தைகள் எதையும் மனதில் வைத்துக் கொள்வதில்லை

அவர்கள் விளையாடுகிறார்கள்

அனுபவிக்கிறார்கள்

ஆனந்தம் காண்கிறார்கள்

மகிழ்கிறார்கள்

--- ஓஷோ ---

Comments