புத்தர் கூறுகிறார் ! - OSHO
புத்தர்
கூறுகிறார் !
எப்படி எல்லாமும் தோன்றி மறைகின்றன
என்ற வியப்பில்
ஒரே ஒரு நாளைக் கழிப்பது மேல் ...
ஒவ்வொரு குழந்தையும் வியப்போடுதான்
பிறக்கிறது ...
நாம்தான் அதற்கு விஷய ஞானத்தை
திணித்து விடுகிறோம் ...
குழந்தையின் வியப்பு உனக்கு மீண்டும்
வந்து விடுமானால் ...
நீ இந்த பிரமாண்டத்தை புரிந்து
கொள்ள முடியும் ...
அதற்கு விஷய ஞானங்களை தொலைத்து
விடுவதே ஒரே வழி ...
விஷய ஞானம் உன்னை வியப்படைவதற்கு
விடுவதில்லை ...
எப்போது வியப்பு வந்தாலும் உடனே
ஒரு தகவலை ....
ஒரு விளக்கத்தை தந்து விடுகிறது ...
விஞ்ஞான அறிவால்தான் மனிதன்
தன் பிரமாண்டத்தை இழந்து விட்டான் ...
இந்த வியப்புணர்வு என்பது மனிதனுக்கு
கிடைத்த ஒரு வரப் பிரசாதம் ...
உண்மையான ஆன்மிகம் இந்த
வியப்பில் தான் அடங்கியுள்ளது ...
உண்மையான ஆன்மிகம் மேலும்
மேலும் உன்னை வியப்பில் ஆழ்த்துகிறது ...
கடவுள் என்பவர் வியப்பு நிறைந்தவர்
ஆச்சரியம் உடையவர் ...
ஒரு மெய் ஞானிக்கு அருகே இருக்கும்
போது அவரிடம் இருந்து ...
எதையும் கற்றுக் கொள்ள வேண்டும்
நினைக்காதே ...
அறிந்த எல்லாவற்றையும் கழிக்க
வேண்டும் ...
வியப்பால் நிறைக்கப்
பட வேண்டும் ...
மீண்டும் ஒரு குழந்தையாக மாற
வேண்டும் ...
இதைத்தான் இயேசு நீ மீண்டும்
ஒரு குழந்தையாக மாறா விட்டால் ...
இறைவனுடைய ராஜ்யத்தில் நுழைய
முடியாது என்றார் ...
ஓஷோ ...
தம்ம பதம் 4
தொடரும் ...🌺🌿
Comments
Post a Comment