Google

ஒரு இளைஞன் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும்


ஒரு இளைஞன் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும்
எனும் தீராத ஆவலால் தனது குடும்பம், தனது சுற்றம் எல்லோரையும் துறந்து தனக்கு ஒரு
குருவைத் தேடி புறப்பட்டான்.

அப்படி அவன் தனது நகரத்தை விட்டு புறப்பட்டுச்
செல்லும்போது ஒரு அறுபது வயது குறிப்பிடத்தக்க ஒருவர் ஒரு மரத்தடியில் மிகவும்
அமைதியாகவும், மிகவும் வசீகரத்தோடும் அமர்ந்திருப்பதை பார்த்தான்.

அவர்
எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியவராகவும், மிகவும் காந்த சக்தியுடையவராகவும்
இருந்தார்.

அவனையறியாமலேயே தற்செயலாக அவன் அவரிடம் சென்று தான் ஒரு குருவைத் தேடி புறப்பட்டு இருப்பதை கூறினான்.

“நீங்கள் ஒரு மூதறிஞர், உங்களுடைய ஞானத்தைஎன்னால் உணர முடிகிறது. உங்களைச் சுற்றியுள்ள உயிர்துடிப்பை என்னால் உணர முடிகிறது.

 நான் எங்கே போவது? இவர்தான் என்னுடைய குரு என்பதை நான் எப்படி
கண்டு பிடிப்பது? அதன் அறிகுறி என்ன?

 இங்கே பலகுருமார்கள் இருக்கின்றனர், ஆனால் யார்எனக்கு முடிவற்றதற்கு வழி காட்டக் கூடியவர் என்பதை நான் எப்படி உணர்ந்து கொள்வது? என்று எனக்கு கூற முடியுமா?” என்று கேட்டான்.

அந்த வயதானவன், “அது மிகவும் சுலபம்” என்று கூறிவிட்டு, “அந்த குரு எப்படி இருப்பார், அவரைச் சுற்றி எந்த விதமான சூழ்நிலை இருக்கும், அவருக்கு எவ்வளவு வயதிருக்கும்,” எனறெல்லாம் கூறிவிட்டு ‘அவர் எந்த மரத்தடியில் அமர்ந்திருப்பார்’ என்பதைக் கூட
கூறினார்.

இளைஞன் அவருக்கு நன்றி கூறினான். அப்போது அவர், “நீ எனக்கு நன்றி கூறும் நேரம் இன்னும் வரவில்லை, நான் காத்திருக்கிறேன்” என்றார்.

 “ஏன் அவர் இப்படி கூறுகிறார், எதற்காக அவர்காத்திருக்கிறேன் என்கிறார்” என்பது இளைஞனுக்கு புரியவில்லை.

சுமார் முப்பது வருடங்கள் அவன் குருவைத் தேடி காடு, மலை, வனம், வனாந்திரம், பாலைவனமெல்லாம் அலைந்தான்.

ஆனால் எல்லா விதத்திலும்
பொருந்தக் கூடியவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 தோல்வியடைந்தவனாய்,
விரக்தியுற்று, சோர்வாக அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.

அவன் இப்போது இளைஞன்அல்ல. அவன் கிளம்பும்போது அவனுக்கு வயது முப்பது, இப்போது அவனுக்கு வயது அறுபது.

ஆனால் அவன் தன்னுடைய நகரத்தினுள் நுழையும் சமயம்
அவன் அந்த வயதானவன் இன்னும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தான்.

அவனால் தனது கண்களையே நம்ப முடிய வில்லை. “அடக் கடவுளே இவர்தானா அவர் குறிப்பிட்ட மனிதர்! – அவருக்கு 90 வயதிருக்கும் என்று கூட குறிப்பிட்டாரே……

மேலும் மரத்தைப் பற்றி கூட சொன்னார். அவர் அமர்ந்திருந்த மரம் என்ன என்பதைக் கூட
பார்க்க முடியாத அளவு முழுமையாக தன்னுணர்வின்றி இருந்திருக்கின்றேனே.

 அவர்
குறிப்பிட்ட அந்த மணம் – அந்த பிரகாசம், அந்த இருப்பு, அவரைச்சுற்றியுள்ள அந்த
உயிர் துடிப்பு………”

அவன் அவர் காலடியில் விழுந்தான். “என்ன விதமான வேடிக்கை
இது,!

முப்பது வருடங்களாக நான் பாலைவனத்திலும், மலைகளிலும் தேடி
அலைந்தேன்.

இது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படி என்னை தேடி அலையவிட்டு விட்டீர்களே” என்று கேட்டான்.

அவர் கூறினார், “எனக்கு தெரிந்திருப்பது ஒரு பொருட்டே அல்ல.
உன்னால் தெரிந்துகொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்வி.

நான் முழுமையாக தெளிவாக
விளக்கிக் கூறினேன்.

ஆனால் நீ இந்த முப்பது வருடங்கள் தேடி திரிந்து  அலைச்சலுக்குப் பிறகுதான் உனக்கு ஒரு சிறிதளவு கவனம்
வந்திருக்கிறது.

அன்று நீ எனக்கு நன்றி கூறியபோது, நான் அதற்கான நேரம் இன்னும்
வரவில்லை, ஒருநாள் அந்த நேரம் வரும் எனக் கூறினேன் அல்லவா?

நீ உன்னுடைய முப்பது வருடங்கள் தேடி அலைந்ததைப்
பற்றி மிகவும் கவலைப்படுகிறாய், ஆனால் நான் இங்கே முப்பது வருடங்களாக உனக்காக
உட்கார்ந்துகொண்டு இருக்கிறேன்.

 என்னுடைய சொந்த வேலை எப்போதோ முடிந்து விட்டது.என்னுடைய படகு வந்து எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

நான் ஒத்திப் போட்டு,ஒத்திப்போட்டுகொண்டே வந்திருக்கிறேன். முட்டாளே முப்பது வருடங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாயே!

 நான் மரத்தைப் பற்றிக்கூட விவரித்தேனே,
என்னுடைய ஒவ்வொன்றையும் பற்றியும் விவரமாக கூறினேனே – என்னுடைய மூக்கு, என்னுடைய தாடி, என்னுடைய கண்கள்!. நான் விரிவாக விளக்கமாக எல்லாவற்றையும் கூறினேன்.

 நீ என்னைத் தேடி அவசரமாக ஓடினாய்.

ஆனால் இன்னும் தாமதமாகி விடவில்லை. நான் இறந்து
போய்விட்டால் எனது வார்த்தை, எனது வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போய்விடுமே என்றுஅஞ்சினேன்.

கூடிய விரைவில் இந்த முட்டாள் வந்துவிடுவான், ஆனால் நான் இங்கே
இல்லையென்றால் எனது வர்ணனை, என்னைப்பற்றிய எனது குறிப்பு, எல்லாமே வீணாகிப்
போய்விடுமே, எல்லாம் பொய்யென்று ஆகிவிடுமே என்று கவலைப்பட்டேன்.

 அதை
நிரூபிப்பதற்காக, நான் இந்த மரத்தடியில் முப்பது வருடங்களாக உட்கார்ந்து
கொண்டிருக்கிறேன்.

நீ என்னை அன்றே தேர்ந்தெடுத்துவிட்டாய், ஆனால் நீ அதை உணர
முடியாது, உனக்கு அந்த கண்கள் அன்று இல்லை.

 நீ என் வார்த்தைகளை கேட்டாய், ஆனால்
அதன் பொருளை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் உன் முன்னால் இருந்தேன்,என்னை நானே விவரித்துக் கூறினேன், ஆனால் நீ என்னை எங்கோ தேடும் எண்ணத்தில்இருந்தாய்” என்று கூறினார்.
.
🥀🌿🌺🌿🥀🌿🌺🌿🥀

Comments