Google

மனதை ரசியுங்கள் -OSHO



மனதை ரசியுங்கள்
மனதை வகைப்படுத்தலும் (சில சமயங்களில்) அதிலிருந்து வெளியே வருதலும்
மனதை ரசியுங்கள்
மனதை நிறுத்த முயலாதீர்கள். அது உங்களுடைய இயற்கையான ஒருபகுதி; அதை நிறுத்த முயன்றால் நீங்கள் கிறுக்கனாகிவிடுவீர்கள். அது ஒருமரம் தன்இலைகளை தடுப்பதைப்போல; மரம் பைத்தியமாகிவிடும். இலை என்பது அதற்கு இயற்கையானது.
அதனால் முதல்விஷயம்: யோசிப்பதை நிறுத்த முயலாதீர்கள், அது உண்மையில் நல்லது.
இரண்டாவது விஷயம்: தடுக்காமல் இருப்பது மட்டும் போதாது, இரண்டாவது அதை ரசிக்க வேண்டும். அதனுடன் விளையாடுங்கள்! அது ஒரு அழகான விளையாட்டு! அதனுடன் விளையாடுங்கள், அதை ரசியுங்கள், அதை வரவேற்றுக் கொள்ளுங்கள், நீங்கள்  அதை பற்றி கவனமாக இருப்பீர்கள். அதிக விழிப்புணர்வோடு. ஆனால் அந்த விழிப்புணர்வு என்பது மிக, மிக, மறைமுகமாக வரும். , விழிப்புவேண்டும் என்கிற முயற்சியாக இருக்காது.  நீங்கள் விழிப்போடு இருக்க முயலும்போது, மனம் உங்களை திசை திருப்புகிறது, அதன்மீது உங்களுக்கு கோபம் வருகிறது. அரட்டையடித்துக் கொண்டேயிருக்கிற ஒரு அசிங்கமான மனம் என்கிற எண்ணம் ஏற்படும். நீங்கள் மெளனமாக இருக்க நினைக்கிறீர்கள், அது உங்களை அனுமதிப்பதில்லை. அதனால் மனதை ஒரு எதிரியாக கருதத் துவங்குகிறீர்கள்.
அதுநல்லதல்ல; அது உங்களையே இரண்டாகப் பிரிப்பது.  பிறகு நீங்களும், உங்கள் மனமும் இரண்டாகிறீர்கள்., மோதல், உரசல் துவங்குகிறது. எல்லா உரசல்களுமே தற்கொலையானது காரணம் உங்கள் சக்திதான் தேவையில்லாமல் விரயமாகிறது. நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும் அளவுக்கு நமக்கு பலம் இல்லை. அதே சக்தியை சந்தோஷத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
அதனால் யோசிக்கிற நிகழ்வை ரசிக்கத் துவங்குங்கள். எண்ணங்களில் நயநுட்பங்களை கவனியுங்கள், அது எத்தனை திருப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒன்று எப்படி மற்றொன்றுக்கு கொண்டு செல்கிறது., அவை எப்படி ஒன்றுக்கொன்று கோர்த்துக் கொள்கிறது.  அதை கவனிப்பதே ஒரு அற்புதம் ஒரு சின்ன யோசனை உங்களை எங்கேயோ ஒருகோடி எல்லைக்கு கொண்டுசெல்லும் அதை கவனித்தால் அவைகளுக்குள் எந்தத்தொடர்பும் இருக்காது.
அதை ரசியுங்கள் – அது ஒரு விளையாட்டாக இருக்கட்டும். வேண்டுமென்றே விளையாடுங்கள் உங்களுக்கே வியப்பாக இருக்கும்; சிலசமயங்களில் அதை ரசிக்கத் துவங்குங்கள். அழகான இடைநிறுத்தங்களை காண்பீர்கள்.  திடீரென்று ஒருநாய் குரைக்கும், ஆனால் உங்கள் மனதில் எதுவுமே எழாததை காண்பீர்கள், யோசனை சங்கலி துவங்கியிருக்காது. நாய் குரைத்துக் கொண்டேயிருக்கும், நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் எந்த சிந்தனையும் எழாது.  சின்ன இடைவெளிகள் தோன்றும்… ஆனால் அவைகளை நிரப்ப வேண்டியதில்லை. அவை தானாகவே வருகிறது, அவை வரும்போது, அவை அழகாக இருக்கின்றன.  இந்த சின்ன இடைவெளிகளில் நீங்கள் கவனிப்பவரை கவனிக்கிறீர்கள்.  – ஆனால் அது இயற்கையாகவே நடக்கும். மறுபடியும் சிந்தனைகள் வரும் நீங்கள் அதை ரசிப்பீர்கள்.  சுலபமாக செல்லுங்கள், அதை சுலபமாக எடுத்துக் கொள்ளுங்கள்.  ஒரு விழிப்புணர்வு உங்களுக்குள் வரும். ஆனால் அவை மறைமுகமாக வரும்.
கவனிப்பது, ரசிப்பது, சிந்தனைகளில் ஒரு திருப்பம் ஏற்படுத்துவதை பார்ப்பது, லட்சக்கணக்கான அலைகளோடு இருக்கும் கடலை கவனிப்பதைப்போல இருக்கும்.  இதுவும்கூட ஒருகடல்தான், எண்ணங்கள்தான் அலைகள். ஆனால் மக்கள் போய் கடலில் இருக்கும் அலைகளை ரசிக்கிறார்கள்.  ஆனால் தங்கள் உள்ளுணர்வில் ஏற்படும் அலைகளை ரசிப்பதில்லை.

    ஓஷோ 

Comments