நிர்வாணா புத்தர் - ஓஷோ,,,
நிர்வாணா
புத்தர்
ஓஷோ,,,
புத்தர் ஞானம் தெளிந்து வந்த காலகட்டம் ஒரு அஞ்ஞான கூட்டம் ஆண்டு கொண்டிருந்த நேரம்.
மதகுருமார்களின் ஆதிக்கம்
மக்களின் அறியாமை,,
தன் இறுதியான லட்சியத்திற்கு எந்த ஒரு நேர்மறைச் சொல்லையும் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தார்.
இதன் மூலம் உங்கள் " தான் " என்பது அழிக்கப்படுகிறது.
அவர் இறுதியானதை ஒன்றுமில்லாதது, சூன்யம், பூஜ்யம் என்று அழைத்தார். ஆனால் பூஜ்யம் என்பது இலட்சியமாக ஆக முடியாது.
பூஜ்யம் வேண்டுமென்று யார் விரும்புவார்கள்? அது தான் பயம். எல்லோருமே பூஜ்யம் அடைவதற்கான எல்லா வழிகளையும் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள்.
புத்தர் அந்த இறுதியான நிலைக்கு ஒரு அற்புத பெயர் சூட்டினார்:
நிர்வாணா
இந்த அழகான வார்த்தையை தேர்ந்தெடுத்தின் மூலம் அவர் எல்லா சிந்தனையாளர்களையும் மற்றும் தத்துவஞானிகளையும் அதிர்ச்சியடையச் செய்தார்.
நிர்வாணா என்பது விளக்கை ஊதி அணைப்பது ஆகும்.
விளக்கில் ஒரு சிறிய சுடர் சிறிய வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டு இருந்தது. அதுவும் போய் விட்டால் உங்களைச் சுற்றிலும் முழுமையான ஆழம் காண முடியாத இருள் சூழ்ந்துள்ளது.
ஓஷோ
அன்பின் இருப்பிடம்,,,
Comments
Post a Comment