Google

ஞானத்தின் பிறப்பிடம்




ஞானத்தின் பிறப்பிடம்


பக்கம் 56


உன் முன் இருக்கும் இந்த  கண நேரத்தில் வாழ்ந்து பார்.
எதிர்காலத்தை விட்டுவிடு அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்.

இந்த கணம்  நேரத்தை இதுதான் உனக்கு கிடைத்துள்ள இறுதியான கண நேரம் என்பது போல.
இதை போன்றதொரு நேரம் இனிமேல்  உனக்கு வரப்போவதே இல்லை என்பதை போல எண்ணிக்கொண்டு அவ்வளவு முழுமையுடன் அபரிமிதத்துடனும்  வாழ்ந்து விடு.
அப்போது பணம் மற்றும் அதிகாரம் இவற்றின் மீதுள்ள ஆசைகள் வெறுமனே உன்னை விட்டு விலகி சென்று விடும்.




திடீரென்று

இன்று நீ இறக்க போகிறாய் என்று உனக்கு தெரிந்தால் என்னா நடக்கும். ?

அப்போதும் நீ பணத்தை பற்றி சிந்தித்து கொண்டிருப்பாயா..?


உடனே பணத்தை பற்றி ஆசைகள் எல்லாம் உன்னை விட்டு விலகிவிடுமல்லவா.


இன்று தான் உனது வாழ்வின் இறுதி நாள் எனில் நீ நாளையைப் பற்றியோ அல்லது இந்த உலகில் அதிக பணம் சம்பாதிப்பதைப் பற்றியோ சிந்தனை செய்து நேரத்தை வீணாக்கி கொண்டிருக்க மாட்டாய்

அப்போது உனக்கு நாளை என்பதே இருக்காது.

எனவே நாம் நாளை , நாளை எனது எண்ணி வாழ்வதால்தான் பணம் மிகவும் முக்கியமானதாக  ஆகிவிட்டது.
மேலும் நாம் நலமாக  வாழ்வதில்லை. நாம் மற்றவர்களை  போல நடிக்கிறோம்.
அதனால்தான் பணம் மிகவும் முக்கியமானதாக ஆகிவிட்டது.


ஓஷோ.1a

Comments