Google

கணவன் மனைவி அல்லது காதலன் காதலி விழிப்புணர்வுடன் காமத்தில் ஈடுபடுவது குறித்து ஓஷோ கூறுவது



கணவன் மனைவி அல்லது காதலன் காதலி விழிப்புணர்வுடன் காமத்தில் ஈடுபடுவது குறித்து ஓஷோ கூறுவது

உடல்உறவு கொள்ளப்போகும் முன், ஒன்றாக அமர்ந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் மெளனமாக இருவரும் கையை குறுக்காக பிடித்துக் கொள்ளுங்கள்.

இருட்டில் உட்காருங்கள் அல்லது ஒரு மெல்லிய விளக்கொளியில் அமர்ந்து, ஒருவரையொருவர் உணருங்கள்.

லயப்படுங்கள்.

அதை செய்வதற்கான வழி ஒன்று போல சுவாசியுங்கள்.

நீங்கள் மூச்சுவிடும் போது, மற்றவரும் மூச்சுவிடுகிறார்;

நீங்கள் உள்ளே இழுக்கும்போது, மற்றவரும் இழுக்கிறார்.

 இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் இருவரும் லயப்பட்டு விடுவீர்கள்.

 ஏதோ ஒரே ஜடப்பொருள் மாதிரி சுவாசியுங்கள் – இரண்டு உடல்கள் அல்லாமல் ஒன்றாக இருப்பது போல இசைவு கொள்ளுங்கள்.

 ஒருவரையொருவர் கண்களுக்குள் பார்த்துக்கொள்ளுங்கள்,

ஆக்ரோஷமான பார்வை அல்லாமல் மிக மென்மையாக.

ஒருவரையொருவர் ரசிக்க நேரம்
எடுத்துக்கொள்ளுங்கள்.

இருவரும் மற்றவரின் உடலில் விளையாடுங்கள்.

 அந்த தருணம் தானாக வரும்வரையில் உடல்உறவிற்கு செல்லாதீர்கள்.

 நீங்கள் உறவு கொள்வதில்லை,

ஆனால் திடீரென்று நீங்கள் உடல்உறவு கொள்வதாக உணர்வீர்கள்.

 அதற்காக காத்திருங்கள்.

 அது வராவிட்டால், அதை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை.

அது நல்லது; தூங்கச்செல்லுங்கள்,

உடல்உறவு கொள்ள வேண்டியதில்லை.

அந்த தருணத்திற்காக ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றுநாட்கள் காத்திருங்கள்.

ஒருநாள் அது வரும்.

அந்த தருணம் வரும்போது

அந்த உறவு மிகஆழமாகச் செல்லும்.

அது மிக மிக, அமைதியானதாக இருக்கும்.

 ஆனால் அந்ததருணத்திற்காகக் காத்திருங்கள், கட்டாயப்படுத்தாதீர்கள்.

உடலுறவை  தியானம் செய்வதைப் போல் செய்யவேண்டும்.

அது நேசிக்கப்பட வேண்டும்,

அதை மெல்ல ருசித்து, உங்கள்  இருத்தல் அதனுடன் ஆழமாக கலக்கவேண்டும்,

அது ஒரு அளவு கடந்த அனுபவமாக இருக்கும்.

நீங்கள் அதற்குமேல் அங்கு இல்லை.

நீங்கள் காதல் உறவு கொள்ளவில்லை

நீங்களே காதல்.

காதல் என்பது உங்களைச் சுற்றிய பெரியசக்தியாக இருக்கும்.

அது உங்கள் இருவரையும் கடக்கும்;

நீங்கள் இருவருமே அதில் கரைந்துவிடுவீர்கள்.

ஆனால் அதுவரையில் நீங்கள் காத்திருக்கவேண்டும்.

அந்த தருணத்திற்காக காத்திருங்கள்,

விரைவில் அதன் சூட்சமம் உங்களுக்குத் தெரிய வரும்.

அந்த சக்தி சேரட்டும்,

அது தன்னால் நடக்கட்டும்.

 போகப்போக அந்த தருணம் எழுவதை உணர்வீர்கள்.

 முன்னதாக அதன் அறிகுறிகளைப் பார்ப்பீர்கள்,

பிறகு எந்த சிரமமும் இருக்காது

 ஓஷோ 

Comments